ஐபிஎல் தொடரில் நேற்றைய சென்னை - பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டத்தின்போது சிவப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவர் பெங்களூர் ரசிகருக்கு ப்ரோபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் புனேவில் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தனர். இதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. 


பெங்களூர் அணியில் அதிகபட்சமாக லோம்ரோர் 42 ரன்களும், கேப்டன் டு பிளிஸி 38 ரன்களும் எடுத்து இருந்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக தீக்சனா 3 விக்கெட்களும், மொயின் அலி 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர். 


அதன்பிறகு, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தது. அப்போது, அடித்து ஆடிய ருதுராஜ் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னால் வந்த உத்தப்பா, ராயுடு அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, மொயின் அலி ஓரளவு நிலைத்து நின்று ஆடினார். 


மறுமுனையில் சிறப்பாக ஆடிய கான்வே இந்த தொடரில் தனது 2 வது அரைசதத்தை கடந்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து, அவரும் 56 ரன்களில் நடையைக்கட்ட, அடுத்து களமிறங்கிய ஜடேஜா, தோனி ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதன்மூலம் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 


இந்தநிலையில், சென்னை அணி நேற்று 11 வது ஓவரில் பேட்டிங் செய்தபோது, சிவப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவர் பெங்களூர் ரசிகருக்கு முன்பு முழங்காலை மடக்கி முட்டிகால் போட்டு ப்ரோபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






இதைபார்த்து முதலில் அதிர்ச்சியடைந்த பெங்களூர் ரசிகர், அடுத்த நொடியே தனக்கு ஓகே சென்று தலையாட்டினார். தொடர்ந்து, அந்த பெண் தனது காதலுனுக்கு மோதிரமும் மாட்டி விட்டார். இந்த அழகிய காதல் காட்சி இடம்பெற்ற அடுத்த வினாடியில் ஆர்சிபி லெக் ஸ்பின்னர் வனிந்து ஹசரங்காவின் அதே ஓவரில் சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே ஒரு சிக்ஸர் விளாசினார்.


பெங்களூர் அணியின் வெற்றி முக்கிய காரணமாக இருந்த ஹர்ஷல் படேல் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் விட்டுகொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண