நடப்பு ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. நடப்பு ஐபிஎல் தொடர் மற்ற தொடர்களை போல் சற்று சுவாரஸ்யம் குறைந்து இருந்தாலும் அதில் சில விஷயங்கள் சிறப்பாக அமைந்தது. அதிலும் குறிப்பாக இம்முறை ஐபிஎல் தொடரில் வீரர்கள் சிலர் பிடித்த கேட்ச்கள் ரசிகர்களை திக்கு முக்காட வைத்தது. 


அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பிடிக்கப்பட்ட சிறப்பான கேட்ச்கள் என்னென்ன?


ஹர்பிரீத் பரார்:




நடப்பு தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் வீரர் ஹர்பிரீத் பரார் சிறப்பான கேட்சை பிடித்தார். ஆர்சிபி அணியின் ஹசரங்கா ராகுல் சாஹர் வீசிய பந்தை சிக்சருக்கு விரட்ட முறபட்டார். அப்போது அதை லாவகமாக ஹர்பிரீத் சிறப்பாக எல்லை கோட்டிற்கு அருகே நின்று பிடித்தார். அந்த கேட்ச் ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்றது. 


எவின் லூயிஸ்:




கொல்கத்தா-லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில் எவின் லூயிஸின் ஒற்றை கை கேட்ச் மிகவும் வைரலானது. கொல்கத்தா அணியின் வீரர் ரிங்கூ சிங் அடித்த பந்தை லக்னோ அணியின் வீரர் எவின் லூயிஸ் சிறப்பாக ஓடி வந்து ஒற்றை கையில் பிடித்தார் அந்த கேட்ச் பலரையும் கவரும் வகையில் அமைந்தது. 






அம்பத்தி ராயுடு: 




சென்னை-பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி பேட்டிங்கின் போது அக்‌ஷ்தீப் விக்கெட்டை ரவீந்திரா ஜடேஜா எடுத்தார். ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை அக்‌ஷ்தீப் லேசாக தூக்கி அடித்தார். அந்தப் பந்தை அம்பத்தி ராயுடு டைவ் அடித்து சிறப்பாக கேட்ச் பிடித்து அசத்தினார். இந்தக் கேட்ச் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது


ஜோஸ் பட்லர்: 




ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் பட்லரின் சிறப்பான கேட்ச் வேகமாக வைரலானது. இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய பந்தை ஷிகர் தவான் தூக்கி அடித்தார். அப்போது மிட் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த பட்லர் குதித்து ஒற்றை கையில் லாவகமாக பிடித்தார். அந்தக் கேட்ச் வேகமாக வைரலானது. 


விராட் கோலி:




நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலியின் கேட்ச் வைரலானது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்தை பவுண்டரி நோக்கி தூக்கி அடித்தார். அப்போது அந்த பந்தை விராட் கோலி குதித்து ஒற்றை கையில் அசத்தலாக பிடித்தார். அந்த கேட்ச் நடப்புத் தொடரில் சிறப்பான கேட்ச்களில் ஒன்றாக அமைந்தது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண