ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் இந்தப் போட்டியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால், பெங்களூரு அணிக்காக கோலியும், டு ப்ளெசியும் ஓப்பனிங் களமிறங்கினர். யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே, 7 ரன்கள் எடுத்திருந்தபோது கோலி அவுட்டாகி வெளியேறினார். .25 ரன்கள் எடுத்திருந்தபோது டு ப்ளெசி அவுட்டாக, மேக்ஸ்வெல் அடுத்து களமிறங்கினார்.


வந்த வேகத்தில் அதிரடியாக ஆடிய அவர், 13 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து அவுட்டாகினார். சிறப்பாக விளையாடி வந்த ராஜாத் பட்டிதார் 42 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து 58 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால், ஆர்சிபி அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் அணிக்கு முதல் 5 ஓவர் அதிரடியாக அமைந்தது. ஓப்பனர் ஜேஸ்வால், ஜோஸ் பட்லர் சூப்பராக ரன் சேர்க்க, 21 ரன்கள் எடுத்திருந்தபோது ஜேஸ்வால் அவுட்டானார். அவரை அடுத்து சஞ்சு களமிறங்க, பட்லருடன் சேர்ந்து அதிரடி காட்டினார். விக்கெட் எடுக்க பெங்களூரு பந்துவீச்சாளர்கள் திணறினர். தொடர்ந்து அதிரடி காட்டிய பட்லர், சதம் கடந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 18.1 ஓவர்கள் இலக்கை எட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி போட்டியை வென்றது.






இதனால், இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது ராஜஸ்தான் அணி. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் அணியுடன் மோத உள்ளது. 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண