2022 ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. எனினும், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. 


அடுத்து, வரும் வியாழக்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோத உள்ளன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டெவன் கான்வேவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இந்த நல்ல செய்தியை கொண்டாடும் விதமாக சென்னை வீரர்கள் புத்தாடைகளுடன், ஆட்டம் பாட்டத்தோடு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 


வீடியோவைக் காண:






சென்னை அணி வீரர்கள் தோனி, கான்வே, ருதுராஜ், பிராவோ என அனைவரும் வேட்டி, சட்டை அணிந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, தோனி சிஎஸ்கேவின் ஆஸ்தான கலரான மஞ்சள் நிற சட்டையில் வந்து அசத்தினார். அனைவரும் வணக்கம் சொல்லி, வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.






நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான டெவன் கான்வே, கிம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவருக்கு சென்னை அணி ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.




பிற முக்கியச் செய்திகள்:






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண