ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. நடப்புத் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது வரை 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று முனைப்பில் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.


இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் மகனுடன் கால்பந்து விளையாடும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோவை டெல்லி கேபிடல்ஸ் அணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் ரிக்கி பாண்டிங்கின் மகன் ஃபிளட்சர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் கால்பந்து விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் கடைசியில் ரிஷப் பண்ட் ஃபிளட்சரை தூக்கும் வகையில் காட்சிகளும் உள்ளன. 


 






இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது. டெல்லி அணியில் சிலர் கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அவர்கள் அனைவரும் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்து அணியில் களமிறங்கினார். டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் குடும்ப உறுப்பினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக அவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். தற்போது அவர்கள் அனைவரும் குணம் அடைந்த பிறகு டெல்லி அணி மீண்டும் முழு பலத்துடன் களமிறங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண