ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தோனியை தக்கவைக்கப்பட்ட தொகையை விட அதிக தொகைக்கு தீபக் சாஹர் எடுக்கப்பட்டர். இந்நிலையில், காயம் காரணமாக 2022 ஐபிஎல் சீசனின் நிறைய போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பவுலராக களமிறங்குபவர் தீபக் சாஹர். சென்னை அணியின் வெற்றிகளில் இவரது பங்கு அதிகம். அதேபோல், கடைசியாக இந்திய அணி விளையாடிய தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். அதன்படி, வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்ய திட்டமிட்ட சென்னை அணி மீண்டும் தீபக் சாஹரை அதிக விலைக்கு எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: Ashwin on IPL: ”தெரியாம பேசாதீங்க...” - ஐபிஎல் பற்றி குறை கூறிய முன்னாள் கிரிக்கெட்டர்களுக்கு அஷ்வின் பதிலடி




வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய 3வது டி20 போட்டியின்போது சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமியில் ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் கிடைத்துள்ளது.






முதலில் தீபக் சாஹரை எடுக்க சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், சாஹரை எப்படியாவது மீண்டும் அணிக்கு கொண்டு வர சென்னை அணி விடாது முயற்சி செய்தது. இறுதியில், 14 கோடி ரூபாய்க்கு சாஹரை சென்னை அணி எடுத்தது. சென்னை அணியின் கேப்டன் தோனியை கூட அந்த அணி 12 கோடிக்கு  தக்கவைத்தநிலையில், தீபக் சஹாருக்கு 14 கோடி என்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண