உலகின் பிரமாண்ட கிரிக்கெட் டி20 தொடர்களில் ஐபிஎல் தொடருக்கென தனிச்சிறப்பு உண்டு. திருவிழாவை போல கோலாகலமாக நடைபெறும் ஐபிஎல் தொடரைச் சுற்று பாராட்டுகளுக்கு இணையான சர்ச்சைகளும் அவ்வப்போது கிளம்பும். அந்த வரிசையில், முன்னாள் கிரிக்கெட்டர்கள் சிலர், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடும்போது சரியாக விளையாடுவதில்லை என குற்றம் சாட்டி உள்ளனர்.


மேத்யூ ஹைடன், மைக்கேல் அத்தர்டன் உள்ளிட்டோர் ஐபிஎல் விளையாட்டி குறை சொல்லியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், “ஐபிஎல் தொடரின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. திடீரென்று ஒரு நாள் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரைப் பற்றி தவறாக பேசுவதால், அதுவே காரணாமாகாது. 2008 அல்லது 2010 காலகட்டத்தில், ஐபிஎல் விளையாடிய வீரர்களில் 20-25 கிரிக்கெட்டர்கள்தான் இந்திய அணியில் இடம்பிடிப்பர். நான் கிரிக்கெட்டை முழு நேரமாக தேர்வு செய்தபோதும் கூட எங்கள் வீட்டில் கூட, வருமானத்திற்கு எப்படி சமாளிக்கப் போகிறாய் என்று கேட்டனர். ஆனால், இன்று நிலைமை வேறு. ஐபிஎல் தொடரால் குறைந்தது 75-80 கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.



2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும், இம்முறை கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் பயோ பபிள் முறையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான போட்டிகள் மும்பையில் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி முடிவடையும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இந்த 2022 தொடரில் இரண்டு புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால். மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.  மும்பை, பூனேவில் உள்ள 4 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. ப்ளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான மைதானங்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.


அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண