CSK Vs PBKS, IPL 2022 Live: சிஎஸ்கேவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப்... !
CSK Vs PBKS, IPL 2022 Live: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்
சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணியின் ரபாடா பந்துவீச்சில் சென்னை வீரர் ராயுடு 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சென்னை அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்படுகிறது.
17 ஓவர்களின் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
16 ஓவர்களின் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 13 ஓவர்களின் முடிவில் 90 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை வீரர் மிட்சல் சாண்ட்னர் விக்கெட்டை பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் எடுத்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 4 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்துள்ளது.
சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் உத்தப்பாவின் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் வீரர் சந்தீப் சர்மா எடுத்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முடிவில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் ராஜபக்சாவின் விக்கெட்டை பிராவோ எடுத்தார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 16 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் தொடக்க வீரர் ஷிகர் தவான் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 12 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 11 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 8 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயாங்க் அகர்வால் 18 ரன்களில் திக்ஷனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவரின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 22 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். விராட் கோலிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை தவான் பெற்றுள்ளார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தன்னுடைய 200ஆவது ஐபிஎல் போட்டியில் இன்று களமிறங்குகிறார்.
மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை-பஞ்சாப் அணிகள் இதுவரை 3 முறை மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 2 முறையும், பஞ்சாப் அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு சிஎஸ்கே-பஞ்சாப் போட்டி தொடங்குகிறது.
நடப்புத் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றியும் 4ல் தோல்வியும் அடைந்துள்ளது. அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.
நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 2வெற்றி மற்றும் 5 தோல்வியை பெற்று 9ஆவது இடத்தில் உள்ளது.
நடப்புத் தொடரில் சிஎஸ்கே-பஞ்சாப் அணிகள் ஏற்கெனவே ஒரு முறை மோதியுள்ளன. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் 180/8 ஸ்கோரை எடுத்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் 16 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
Background
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. சென்னை அணியைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் வெற்றி பெற்றது சென்னை வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். அதேசமயத்தில் இனி வரும் போட்டிகள் அனைத்திலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் – உத்தப்பா ஜோடி மிகப்பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டியது கட்டாயம். அம்பத்தி ராயுடுவும், ஷிவம் துபேவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது சென்னை அணிக்கு அவசியம்.
அதேபோல, ஆல்ரவுண்டரான மொயின் அலி மற்றும் கேப்டன் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்தலாக செயல்பட்டால்தான் சென்னை அணி சவால் அளிக்க இயலும். முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரா, சான்ட்னர் ஆகியோரும் பந்துவீச்சில் அசத்துவார்கள் என்று நம்பலாம். சென்னை அணி பந்துவீச்சை வலுப்படுத்தினால்தான் வெற்றி வசப்படும். முன்னாள் கேப்டன் தோனி கடந்த போட்டியைப் போல இந்த போட்டியிலும் அசத்தலான பேட்டிங்கைத் தொடங்குவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
ஐ.பி.எல். தொடரில் 4 முறை சாம்பியனாக சென்னை வலம் வந்தாலும் இந்த தொடரில் சென்னையை காட்டிலும் பஞ்சாப் அணியே வலுவாக உள்ளது. பஞ்சாப் அணியில் கேப்டன் மயங்க் அகர்வாலும், தொடக்க வீரர் ஷிகர்தவானும் அசத்தலான தொடக்கத்தை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும். விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடி வருகிறார். லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடியான பேட்டிங் இந்த போட்டியில் கண்டிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -