IPL 2022 Closing Ceremony: ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். கடைசியாக 2016ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசியாக 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.


இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டிக்கு முன்பாக நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஏர் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஏற்கன்வே ரன்வீர் சிங் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டி ஒன்றுக்கு வந்திருந்தார். அப்போது அவர் போட்டியை ரசித்தது ரசிகர்கள் மத்தியில் வைரலானது. 


 






இதைத் தொடர்ந்து அவர் தற்போது ஐபிஎல் நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளார். உலகிலேயே மிகவும் பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் மைதானத்தில் ஐபிஎல் நிறைவு விழா பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் இறுதிப் போட்டியை காண பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும் இது தொடர்பான அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இந்த விழாவில் 75 ஆண்டுகால இந்தியாவின் சுதந்திரத்தை கொண்டாடும் வகையிலும் விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய கிரிக்கெட் தொடர்பாகவும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது. அண்மையில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 83 திரைப்படம் மிகவும் பெரிய ஹிட் அடித்தது. அந்தப் படத்தில் ரன்வீர் சிங் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண