ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.  இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 


ஓப்பனிங் களமிறங்கிய பஞ்சாப் அணியின் பேட்டர் பேர்ஸ்டோ, ரன்களை குவித்தார். மற்றொரு ஓப்பனரான ஷிகர் தவான் 21 ரன்களுக்கு வெளியேற, ஒன் டவுன் களமிறங்கிய பனுகா 1 ரன்னுக்கு வெளியேற பஞ்சாப்பை தூக்கி நிறுத்தினார் பேர்ஸ்டோ. 7 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் என 29 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார்.





அவரைப்போல அதிரடி காட்டிய லியம் லிவிங்ஸ்டன், 42 பந்துகளில் 70 ரன்கள் அடித்தார். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஆனால், லியம் அவுட்டானதற்கு பிறகு களமிறங்கிய பேட்டர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. கேப்டன் மயாங்க் 19 ரன்களுக்கு வெளியேற, மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.


அதனை அடுத்து சேஸிங் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, 4வது ஓவரிலேயே அவுட்டாகி ஷாக் கொடுத்தார் விராட் கோலி. அவரை அடுத்து டுப்ளிசி, மஹிப்பால் விக்கெட்டுகள் சரிய பெங்களூரு அணி திணறியது. பஞ்சப கிங்ஸ் வீரர்களின் பந்துவீச்சை சமாளித்து ஆடிய மேக்ஸ்வெல் 35 ரன்கள் எடுத்தார்.


அவர் களத்தில் இருந்த வரை ஆர்சிபி அணி வெற்றி பெறும் என நினைத்த நிலையில், ஹர்ப்ரீத் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அவரை அடுத்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் தினேஷ் கார்த்திக்கும் சொதப்ப, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, ரபாடா 3 விக்கெட்டுகளும், ரிஷி தவான், ராகுல் சாஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ப்ரீத் பர், ஹர்ஷதீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.






இந்த போட்டியில் தோல்வியை தழுவி இருப்பதால், ஆர்சிபியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு மேலும் சிக்கலில் சிக்கி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண