ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் பட்லர் 67 ரன்கள் எடுத்தார். இதன்காரணமாக 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 158 ரன்கள் எடுத்தது. 


 


159 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 18 பந்துகளில் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் 6 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்திருந்தது. 


 






அப்போது திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஜோடி சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார். இவர் 36 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்காரணமாக மும்பை அணி 15 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. 


 


அதற்கு அடுத்த ஓவரில் திலக் வர்மா 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டிம் டேவிட் பவுண்டரிகள் விளாச தொடங்கினார். இதன்காரணமாக மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற கடைசி ஓவரில் 6 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்தில் பொல்லார்டு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் கடும் பரப்பரப்பு ஏற்பட்டது. அதற்கு அடுத்த பந்தில் டேனியல் சேமஸ் சிக்சர் விளாசி மும்பை அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் நடப்புத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பிறந்தநாள் பரிசாக இந்த முதல் வெற்றி அமைந்துள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண