பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2022 ஐபிஎல் தொடர் இன்று மாலை தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். 


முதல் போட்டி தொடங்கும் முன், பிசிசிஐ சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில், ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்காக பதக்கம் வென்று தந்த நீரஜ் சோப்ரா, பஜ்ரங் பூனியா, ரவி தாஹியா, லவ்லினா ஆகியோரை கவுரவிக்க உள்ளது. இந்நிலையில், பாராட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் நீரஜ் சோப்ரா, முதல் போட்டியையும் காண இருக்கிறார் என தெரிகிறது. 






2019, 2020, 2021 என கடந்த மூன்று ஆண்டுகளாக திறப்பு விழாவை நடத்தாமல் இருக்கும் பிசிசிஐ, இந்த ஆண்டும் திறப்பு விழாவை நடத்தவில்லை. அதற்கு பதிலாக, ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழாவை நடத்தி எளிமையான முறையில் ஐபிஎல் தொடரை தொடங்க இருக்கிறது. 


மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில், புதிய கேப்டன்கள் தலைமையில் இரு அணிகள் களமிறங்க உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணிக்கு எதிரான 3 போட்டிகளிலும் சென்னை அணியே வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு லீக் போட்டிகளிலும், இறுதிப்போட்டியிலும் சென்னை அணி வெற்றி கண்டது. இதனால், இம்முறை கடந்த ஆண்டு பதிவு செய்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் கொல்கத்தா அணி களமிறங்கும் என தெரிகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண