பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2022 ஐபிஎல் தொடர் இன்று மாலை தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். 

மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில், புதிய கேப்டன்கள் தலைமையில் இரு அணிகள் களமிறங்க உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணிக்கு எதிரான 3 போட்டிகளிலும் சென்னை அணியே வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு லீக் போட்டிகளிலும், இறுதிப்போட்டியிலும் சென்னை அணி வெற்றி கண்டது. இதனால், இம்முறை கடந்த ஆண்டு பதிவு செய்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் கொல்கத்தா அணி களமிறங்கும் என தெரிகிறது. 

இதுவரை சென்னை vs கொல்கத்தா நேருக்கு நேர்:

  போட்டிகள் சென்னை வெற்றி கொல்கத்தா வெற்றி முடிவு எட்டப்படவில்லை
மொத்த போட்டிகள் 27 18 8 1
வான்கடே மைதானத்தில் 1 1 0 0
கடைசி 5 போட்டிகளில் 5 4 1 0
2021 ஐபிஎல்  3 3 0 0

சென்னை அணியைப் பொறுத்தவரை ஜடேஜா கேப்டனாக வழிநடத்திச் செல்ல இருக்கிறார். ஓப்பனிங் பந்துவீச்சாளர் தீபக் சஹர் போட்டியில் இல்லாதது பின்னடைவாக அமையலாம். விசா பிரச்னை காரணமாக மொயின் அலி இல்லாததும் பின்னடைவாக அமைந்திருக்கிறது. இவர்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்வது சென்னை அணியை வழிநடத்திச் செல்வதில் ஜடேஜாவுக்கு இருக்கும் முதல் சவாலாக இருக்கிறது.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்க உள்ளது. நிதிஷ் ராணா, வருண் சக்கிரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன் ஆகியோர் அணிக்கு பலம். 

புதிய கேப்டன், புதிய வியூகத்தை இரு அணிகளும் இறக்கிவிட காத்திருக்கின்றன. இதனால், முதல் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண