2022 ஐபிஎல் தொடருக்கான ஆயுத்தப்பணிகள் ஆரம்பமாகிவிட்டது. அந்த வரிசையில், ஒவ்வொரு அணியும் தன் அணி வீரர்களை தக்க வைத்து கொள்ளும் ரிடென்ஷன் முடிவடைந்துள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜிம்பாவே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி ப்ளவர் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  


வழக்கமாக ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் தெரிவித்திருந்தது. 


அதன்படி, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ம் தேதி அறிவித்தது. அதில், பஞ்சாப் கிங்ஸ் அணி, மயாங்க் அகர்வால் மற்றும் ஹர்ஷதீப் சிங் ஆகியோரை தக்க வைத்திருப்பதாக அறிவித்தது. இதனால், பஞ்சாப் அணியில் இருந்து முக்கிய வீரர்களான ராகுல், ரவி பிஸ்னோய், நிக்கோல்ஸ் பூரன் ஆகியோர் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். 



இந்நிலையில், பஞ்சாப் அணியின் உதவி பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜிம்பாவே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி ப்ளவர் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். 


ஜிம்பாவே கிரிக்கெட் அணிக்காக விளையாடிய ஆண்டி ப்ளவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். அதனை அடுத்து, கடந்த 2020 சீசனில் ஐபிஎல் தொடருக்காக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரோடு பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃப்பரும், ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜாண்டி ரோட்ஸும் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆண்டி ப்ளவர் பயிற்சியாளராக பொறுப்பேற்று இரண்டு சீசன்கள் முடிந்துள்ள நிலையில், பஞ்சாப் அணியில் இருந்து அவர் விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகவே அமைந்திருக்கிறது. 53 வயதாகும் ஆண்டி, ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ, அகமதாபாத் அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க: IPL RETENTION 2022: சிலர் காலி... பலர் ஜாலி... ஐபிஎல் 2022 மாநாட்டின் ‛ரிபீட்டு’ ஹீரோஸ் இவங்க தான்!


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண