2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற உள்ளன. இதன்காரணமாக அந்த தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது உள்ள 8 அணிகளும் 4 வீரர்கள் வரை தக்கவைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது. இதற்கு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளனர் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எம்.எஸ்.தோனி(12 கோடி), ரவீந்திர ஜடேஜா(16 கோடி), ருதுராஜ் கெய்க்வாட்(6 கோடி), மொயின் அலி(8 கோடி) ஆகியோரை தக்க வைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரரான சுரேஷ் ரெய்னாவை சென்னை அணி தக்கவைக்கவில்லை. மிஸ்டர் ஐபிஎல் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ரெய்னா தான். அதேபோல் சென்னை அணிக்கு தல தோனி என்றால் சின்ன தல சுரேஷ் ரெய்னாதான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக் சுரேஷ் ரெய்னா இதுவரை 176 போட்டிகளில் களமிறங்கி 4687 ரன்கள் விளாசியுள்ளார். அத்துடன் ஒரு சதம் மற்றும் 33 அரைசதங்களை அடித்துள்ளார்.
சென்னை அணியின் டாப் ஸ்கோரரை அந்த அணி தக்கவைக்காதது தொடர்பாக பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் பலரும் இனிமேல் சென்னை அணியில் சின்ன தல இருக்க மாட்டாரா. இது சென்னை அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்பது பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: குறைந்த காசு... ஆனால் மாஸ் பீசு... ஷேவ் செய்யப்பட்ட இளம் சிங்கங்கள் லிஸ்ட் இது!