ஐ.பி.எல். தொடரின் 37வது ஆட்டமான இன்று ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 8வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், 7வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் மோத உள்ளன. பஞ்சாப் அணி 9 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகள் மட்டுமே பெற்று 6 புள்ளிகளுடன் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் ஆடி 1 போட்டியில் மட்டும் ஆடி 2 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்குமே இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் வாழ்வா? சாவா? என்ற நிலைதான் ஆகும்.
ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை இதற்கு முன்பு 17 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 12 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெற உள்ள ஷார்ஜாவில் இரு அணிகளும் இதற்கு முன்பு 1 போட்டியில் ஆடியுள்ளன. அந்த போட்டியில் பஞ்சாப் அணியே வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் 3 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், 2 போட்டியில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த தொடரில் பெற்ற ஒரு வெற்றியும் பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டுமே பெற்றது ஆகும்.
இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த போது வெற்றி பெற்றுள்ளது. 4 முறை இரண்டாவது முறை பேட்டிங் செய்தபோது வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 3 முறை முதலில் பேட்டிங் செய்தபோது வெற்றி பெற்றுள்ளது. 2 முறை இரண்டாவது பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக ஜானி பார்ஸ்டோ 97 ரன்களை குவித்துள்ளார். பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 104 ரன்களை ஹைதராபாத் அணிக்கு எதிராக குவித்துள்ளார். அதேபோல, பஞ்சாப் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் தன் வசம் வைத்திருந்தார்.
அவர் இதுவரை பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் 698 ரன்களை குவித்துள்ளார். பஞ்சாப் அணி சார்பில் ஹைதராபாத் அணிக்கு எதிராக மனன்வோரா அதிகபட்சமாக 195 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிராக புவனேஷ்குமார் ஹைதராபாத் அணிக்காக 19 விக்கெட்டுகளை அதிகபட்சமாக கைப்பற்றியுள்ளார். பஞ்சாப் அணி சார்பில் சந்தீப்சர்மா அதிகபட்மாக ஹைதராபாத்திற்கு எதிராக 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஹைதராபாத் அணி சார்பில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக அங்கித் ராஜ்புத் 14 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஹைதராபாத் அணி சார்பில் புவனேஷ்குமார் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
DC vs RR: இரு விக்கெட் கீப்பர் கேப்டன்களுக்கு இடையான மோதல்... வெல்லப்போவது யார்?