2021 ஐபிஎல் தொடரில், இன்று நடைபெறும் 36வது ஆட்டத்தில் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் டெல்லி இரண்டாவது இடத்திலும், 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. வார இறுதி என்பதால், இன்று டபுள் தமாக்காவாக இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியாக, மதியம் 3.30 மணிக்கு, அபுதாபி மைதானத்தில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. 


இதுவரை, டெல்லி ராஜஸ்தான்:


இதுவரை டெல்லி, ராஜஸ்தான அணிகள் 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 11 முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், 12 முறை ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை, இரு அணிகளும் அபுதாபி மைதானத்தில் மோதியதில்லை. இன்று விளையாட இருக்கும் போட்டியே இரு அணிகளும் அபுதாபி மைதானத்தில் சந்திக்கப்போகும் முதல் போட்டி என்பதால், போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது இன்றைய ஆட்டத்தைப் பொருத்து உள்ளது.



சேஸிங் ரெக்கார்டு:


இரு அணிகளுக்கு இடையான மோதலில், முதலில் பேட்டிங் செய்து டெல்லி 6 முறையும், ராஜஸ்தான் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சேஸிங் செய்து 5 முறை டெல்லியும், 7 முறை ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.


இந்த சீசனில், டெல்லி - ராஜஸ்தான்:


இந்த சீசனின் முதல் பாதியில் டெல்லியும், ராஜஸ்தான் அணிகளும் மோதியபோது, 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இப்போது இரண்டாவது பாதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஹைதராபாத்துக்கு எதிரானா போட்டியில்,134 ரன்களுக்கு டெல்லி ஹைதரபாத்தை சுருட்டியது. எளிதான இலக்கை சேஸ் செய்த டெல்லி, போட்டியை வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகு, ரன் ரேட் அடிப்படையில் சென்னையை அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது. 


பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரே போட்டியோடு இரண்டாம் பாதியை தொடங்கி இருக்கும் ராஜஸ்தான், கார்த்திக் யோகியின் அசத்தல் கடைசி ஓவரால், வெற்றியை தன் பக்கம் ஈர்த்தது. ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க, இனி நடக்கும் ஒவ்வொரு போட்டியும் ராஜாஸ்தான் அணிக்கு முக்கியம் என்பதால், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ராஜஸ்தான் களமிறங்கும். 


CSK vs RCB, Match Highlights: தோனி ஃபினிஷிங்... வலிமையான சென்னை சேஸிங்... வெற்றியோடு சிஎஸ்கே