2021 ஐபிஎல் தொடரின் 40ஆவது போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும். ராஜஸ்தான் தற்போது 9 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில் உள்ளது. மறுபுறம், இந்த ஆண்டு ஐபிஎல்லில் ஹைதராபாத்தின் ஆட்டம் மோசமாக இருக்கிறது. அந்த அணி 9 போட்டிகளில் 8ல் தோல்வியடைந்துள்ளது. ஹைதராபாத் தற்போது 2 புள்ளிகளுடன் புள்ளிகள் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது மற்றும் பிளேஆஃப் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.


இந்த ஐபிஎல் தொடரில், ராஜஸ்தானுக்கு முன்னேற இன்னும் வாய்ப்பு இருந்தாலும், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் நோக்கிலே விளையாடும். ஐபிஎல்லின் இரண்டாம் கட்டத்தில், பஞ்சாப் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.  டெல்லி கேப்பிடல்ஸிடம் அணியிடம் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில், ஹைதராபாத் இரண்டாவது கட்டத்தில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.


 இரு அணிகளும் சம நிலையில் உள்ளன


ஐபிஎல்லில் இதுவரை இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டிகள் என்று வரும்போது, ​​இரு அணிகளும் நன்றாகவே விளையாடியுள்ளன. லீக்கில் இதுவரை ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் 14 முறை மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா ஏழு முறை வெற்றி பெற்றுள்ளன. இந்தியாவில் ஐபிஎல்லின் முதல் கட்டத்தில் இரு அணிகளும் கடைசியாக மோதியது, இதில் ராஜஸ்தான் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ஏமாற்றம் அளிக்கும் இரு அணியின் பேட்ஸ்மேன்களும் 


2021 ஐபிஎல் தொடரில் இரு அணிகளின் பேட்ஸ்மேன் இதுவரை சிறப்பாக செயல்படவில்லை. சஞ்சு சாம்சனைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் ராஜஸ்தானில் சிறப்பாக விளையாடவில்லை. மேலும் ஹைதராபாத்தின் நட்சத்திர வீரர்களான கேன் வில்லியம்சன் மற்றும் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடவில்லை. பந்துவீச்சில், ரஷித் கான் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரின் அனுபவம் ஹைதராபாத் அணிக்கு பெரிதும் பயன்படும் வகையில் உள்ளது.







போட்டி எப்போது தொடங்கும்?


ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் இடையேயான போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நெட்வொர்க்  பெற்றுள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும், டிஸ்னி+ஹாட்ஸ்டாரிலும் பார்த்து மகிழலாம். சிறப்பம்சம் என்னவென்றால், இந்த முறை நீங்கள் இந்த போட்டியை 8  வெவ்வேறு மொழிகளில் ஸ்டார் இந்தியா சேனல்களில் பார்க்கலாம்.