ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில், இன்று பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இரு அணிகளும் இதற்கு முன்பு துபாய் மைதானத்தில் நேருக்கு நேர் மோதியதில்லை. இன்று விளையாடப்போகும் போட்டியே, துபாயில் இரு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் போட்டியாகும். இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி.


ராஜஸ்தான் பேட்டிங்:


ஓப்பனிங் களமிறங்கிய எல்வின் லூயிஸ், யஷஸ்வி ஜேஸ்வால் முதல் 5 ஓவரில் அதிரடி காட்டினர். அடுத்தடுத்து பவுண்டர்களாக தெறிக்கவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, யார் பந்துவீசினாலும் பவுண்டரிகள் அடித்தனர். 30 பந்துகளில் 50 ரன்கள் எட்டிய ராஜஸ்தானுக்கு, அர்ஷதீப் சிங் பந்துவீச்சில் தான் முதல் விக்கெட் விழுந்தது. சிறப்பாக விளையாடி வந்த எவின் லூயிஸ் விக்கெட்டை எடுத்து பஞ்சாப் அணிக்கு முதல் ப்ரேக் த்ரூ கொடுத்தார் அர்ஷதீப் சிங். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சாம்சன், 4 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.  


சாம்சனை அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன், வந்து எதிர்கொண்ட சில பந்துகளை பவுண்டர்களுக்கு அனுப்பி ரன் சேர்த்தார். இதனால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 11 ஓவர்களின் 100 ரன்களை எட்டியது ராயல்ஸ். இதே ஃபார்மில் தொடர்ந்தால், ராயலஸ் 200 ரன்களை எட்டும் வாய்ப்பு உள்ளதால், விக்கெட் எடுக்க போராடினர் பஞ்சாப் கிங்ஸ். மீண்டும் ஒரு முறை அர்ஷப்தீப் சிங் மீட்பராக வந்தார். அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்த லியம் லிவிங்ஸ்டன் விக்கெட்டை எடுத்து ராயல்ஸ் ரன் வேட்டைக்கு மீண்டும் ஒரு ப்ரேக் கொடுத்தார்.






கவனிக்க வைத்த ஜேஸ்வால், லோம்ரார் 


சிறப்பாக விளையாடி வந்த இளம் வீரர் யஷஸ்வி ஜேஸ்வால், அரை சதம் கடப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது 49 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார். எனினும் சிறப்பாக ஆடினார். 6 பவுண்டர்கள், 2 சிக்சர்கள் என 36 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அவுட்டானார் ஜேஸ்வால். 


இன்றைய போட்டியில், ஜேஸ்வாலைப் போல மற்றொரு இளம் வீரர் அதிரடி காட்டினார். அவர்தான் மஹிபால் மோம்ரார். 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என அதிரடி காட்டிய அவர் 17 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கிரிக்கெட் வட்டாரத்தை கவனிக்க வைத்துள்ளார். இரு இளம் வீரர்களும் அரை சதம் அடித்திருக்க வேண்டியது, 40+ ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து வெளியேறியது ஏமாற்றமே. 


விக்கெட்டுகளும் விழ, ரன்களும் அடிக்க இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் சிறப்பாகவே விளையாடினர். 200 ரன்களை எட்ட விடாமல் தடுத்ததில் பஞ்சாப் அணி வீரர்கள் மும்முரமாக இருந்தனர். அது பலனளிக்க, 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் 185 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி வெற்றி பெற 186 ரன்கள் எடுக்க வேண்டும். 


இதுவரை நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 10 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது பேட்டிங் செய்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த மைதானத்தில் இதற்கு முன்பு இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி கொள்ளாததால், ___ ரன்களை சேஸ் செய்யும் பஞ்சாப் அணி, வெற்றி பெறுமா என்று இரண்டாவது இன்னிங்ஸில் பார்ப்போம்.