ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில், இன்று பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 7வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் பின் தங்கி உள்ளதால், இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இன்று களமிறங்க உள்ளனர். ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள இந்த போட்டியில் வெற்றி முக்கியம் என்பதால், இரு அணிகளும் டஃப் கொடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதுவரை ஐபிஎல்லில் பஞ்சாப் vs ராஜ்ஸ்தான் 


ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 10 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் இதற்கு முன்பு துபாய் மைதானத்தில் நேருக்கு நேர் மோதியதில்லை. இன்று விளையாடப்போகும் போட்டியே, துபாயில் இரு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் போட்டியாகும். 


இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் பஞ்சாப் அணி 3 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது பேட்டிங் செய்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலக்கை விரட்டிப் பிடிக்கும்போது 6 போட்டிகளில் இலக்கை வெற்றிகரமாக விரட்டிப் பிடித்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.


கேப்டன்கள் சொல்வது என்ன?







இன்றைய போட்டியில் களமிறங்க கூடிய வீரர்களின் உத்தேச பட்டியல் 


பஞ்சாப் கிங்ஸ்: கே.எல் ராகுல் (கேப்டன்), மயாங்க் அகர்வால், கிறிஸ் கெயில் / மார்க்ரம், பூரன், ஹூடா, ஷாருக்கான், ஃபேபியன் ஆலன், ரவி பிஸ்னாய், அர்ஷதீப் சிங்ம் நாதன் எல்லீஸ், முகமது ஷமி.


ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), இவின் லூயிஸ், யஷஸ்வி ஜெயிஸ்வால், ரியான் பராக், சிவம் துபே, லியன் லிவிங்ஸ்டன்,ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, கார்த்திக் யோகி, தப்ரைஸ் ஷம்ஸி.