ஐ.பி.எல். தொடரின் இன்று நடைபெறும் 34வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன


அபுதாபியில் இன்று நடைபெறும் போட்டியில் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாகும். புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள மும்பை அணியும், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற முழுவீச்சில் களமிறங்கும்.


அதிக வெற்றி யாருக்கு? :




இரு அணிகளும் இதற்கு முன்பு ஐ.பி.எல். தொடர்களில் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 6 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. போட்டி இன்று நடைபெற உள்ள அபுதாபி ஷேக் சையத் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்பு 3 முறை மோதியுள்ளனர். அதில், 2 முறை மும்பை அணியும், 1 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது.


அதிக ரன்கள் : 




இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் மும்பை அணியும், ஒரு போட்டியில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரின் முதல் பாதியில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி 10 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி இரண்டாவது பேட்டிங் செய்த 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.


இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளில் மும்பை அணி சார்பில் ஒரு போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா 109 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்துள்ளார். கொல்கத்தா அணி சார்பில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக மணிஷ்பாண்டே 81 ரன்களை எடுத்துள்ளார். கொல்கத்தாவிற்கு எதிராக மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 866 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். கொல்கத்தா அணி சார்பில் மும்பைக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 423 ரன்களை குவித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் தற்போது மும்பை அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிக விக்கெட்டுகள் : 




மும்பை அணி சார்பில் கொல்கத்தாவிற்கு எதிராக லசித் மலிங்கா அதிகபட்சமாக 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கொல்கத்தா அணி சார்பில் மும்பை அணிக்கு எதிராக சுனில் நரைன் அதிகபட்சமாக 22 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சாக கரண்சர்மா மும்பை அணிக்காக 16 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கொல்கத்தா அணி சார்பில் மும்பைக்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்சமாக ஆந்த்ரே ரஸல் 15 ரன்களே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 


மேலும் படிக்க : Most Duck Outs in IPL: ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை "டக்" அவுட்" ஆகிய வீரர்கள் : முதலிடத்தில் இருப்பவர் யார் தெரியுமா?