Most Duck Out Batsman in IPL: துபாயில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் அந்த அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க வீரருமான டேவிட் வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்மூலம், டேவிட் வார்னர் வேதனையான சாதனை பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.


அதாவது, ஐ.பி.எல். வரலாற்றில் 8 முறை ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார். மேலும், அவருடன் சேர்ந்து 11 பேர் 8 முறை டக் அவுட்டாகி உள்ளனர். அந்த 11 பேரில் முதலிடத்தை டேவிட் வார்னர் பிடித்துள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டாகிய முதல் 5 வீரர்கள் பட்டியலை கீழே காணலாம்.


5-வது இடம் :



  • யூசூப் பதான் - 174 ஆட்டங்கள்  - 9 முறை

  • அஸ்வின்  - 160  ஆட்டங்கள்  - 9 முறை

  • பிரவீன் குமார் - 119 ஆட்டங்கள்  - 9 முறை

  • ஜேக் காலீஸ் -  98 ஆட்டங்கள்   - 9 முறை

  • ரஷீத்கான் - 70 ஆட்டங்கள்     - 9 முறை




4-வது இடம்:



  • ஷிகர் தவான்  -  185 ஆட்டங்கள்   - 10 முறை

  • ஏபி டிவிலியர்ஸ் – 177 ஆட்டங்கள் - 10 முறை

  • அமித் மிஸ்ரா - 154 ஆட்டங்கள்   - 10 முறை




3-வது இடம் :



  • தினேஷ் கார்த்திக் - 204 ஆட்டங்கள்    - 11 முறை

  • மேக்ஸ்வேல்            - 90 ஆட்டங்கள்      - 11 முறை




2-வது இடம் :



  • பியூஷ் சாவ்லா -  164 ஆட்டங்கள்     - 12 முறை

  • கவுதம் கம்பீர் - 154 ஆட்டங்கள்      - 12 முறை

  • மணீஷ் பாண்டே - 152 ஆட்டங்கள்      - 12 முறை

  • மந்தீப்சிங் - 104 ஆட்டங்கள்      - 12 முறை




  முதல் இடம் :



  • ரோகித் சர்மா - 207 ஆட்டங்கள்   - 13 முறை

  • அம்பத்தி ராயுடு - 167 ஆட்டங்கள் - 13 முறை

  • ஹர்பஜன் சிங் - 163 ஆட்டங்கள் - 13 முறை

  • ரஹானே - 151 ஆட்டங்கள் - 13 முறை

  • பார்த்தீவ் பட்டேல் - 139 ஆட்டங்கள் - 13 முறை




ஐ.பி.எல் வரலாற்றில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மிகவும் வேதனையான சாதனையே ஆகும்.