ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் மோதல்களில் ஒன்றான சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் போட்டி ஷார்ஜா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில், வேகமாக ரன் சேர்ந்தது போல இருந்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. இதனால்,  20ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது பெங்களூரு அணி.


வலிமையான சென்னை சேஸிங்:


சென்னை அணிக்கு ஓப்பனிங் களமிறங்கிய ருதுராஜ், டுப்ளெசி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பவர் ப்ளேவில் பவுண்டரிகளை அடித்து ரன் சேர்த்தனர். இதனால், 6 ஓவர்கள் முடிவில் 55 ரன்கள் எட்டியிருந்தது சென்னை. போட்டியின் 9 & 10-வது ஓவர்களில் அடுத்தடுத்து ருதுராஜ், டுப்ளெசி அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி, 2 சிக்சர்களை அடித்துவிட்டு ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 






மொயின் அலி வெளியே போனவுடன், ராயுடுவும் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், போட்டியை முடித்து வைக்கும் பொறுப்பில் ரெய்னாவும், தோனியும் களத்தில் இருந்தனர். தோனி நிதானமாக கூட நிற்க, ரெய்னா ஹசரங்காவின் ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரிகளை அடித்து இலக்கை நெருங்கினார்.  18.1 ஓவரில், 4 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி போட்டியை வென்றது. இதனால், 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் சென்னை அணி முதல் இடம் பிடித்துள்ளது. 







கடைசி சீசனில், ஷார்ஜாவில் நடைபெற்ற மூன்று போட்டிகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றிருந்ததால், இந்த தொடர் தோல்விக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.