SRH vs CSK Live: இந்த சீசனில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி
இன்று போட்டி நடைபெற உள்ள ஷார்ஜா மைதானத்தில் இரு அணிகளும் ஒரு போட்டியில் மட்டும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த போட்டியில் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது
மொயின் அலி ஆட்டமிழந்த நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னா இறங்கியுள்ளார். 15.1 ஓவரில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது. எளிய இலக்கை நோக்கி
ஒரு விக்கெட் மட்டுமே இழந்த சென்னை அணி 36 பந்துகளுக்கு 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் விளையாடி வருகிறது. மொயின் அலி 17 ரன்கள், டு ப்ளஸி 40 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
சென்னை அணி தனது முதல் விக்கெட்டை இழந்துள்ளது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் வழக்கம் போல அரை சதம் கடக்காமல் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சிஎஸ்கே பேட்டிங் பவர் ருதுராஜ் ஒரு சிக்ஸர் அடிக்க, அடுத்த பந்தை வீசிய ரஷித் எல்பிடபிள்யூ கேட்டார். அம்பயர் அவுட் கொடுக்க, சிஎஸ்கே ரிவியூ கேட்டது. ஆனால் அதில் கிளவுஸில் பந்து பட்டதால் ரிவியூ மூலம் நாட் அவுட் என அறிவிக்கப்பட்டத.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் ஓவரில் 6 ரன்கள் எடுத்துள்ளது. ருதராஜ், டிபிளஸி இறங்கியுள்ளனர்.
Background
ஐ.பி.எல். தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை அணியும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த தொடரில் அசுர பலத்துடன் உள்ள சென்னை அணியை ஹைதராபாத் அணி எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதே ஹைதராபாத் அணி ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றைப் பொறுத்தவரை இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் விளையாடியுள்ளன. அவற்றில் 4 போட்டிகளில் மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெற உள்ள ஷார்ஜா மைதானத்தில் இரு அணிகளும் ஒரு போட்டியில் மட்டும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த போட்டியில் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -