RCB vs SRH Live: வெற்றியை தாரை வார்த்த ஆர்சிபி ; ஹைதராபாத்துக்கு இது ஆறுதல் வெற்றி

ஐபிஎல் வரலாற்றில் 19 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ஹைதராபாத் 10 முறையும், பெங்களூரு 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

கார்த்திகா ராஜேந்திரன் Last Updated: 07 Oct 2021 12:29 AM
17 ஓவர் முடிவில் 120/5

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி, ரன் சேர்க்க திணறி வருகின்றது.

Background

2021 ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ள நிலையில், முதல் அணியாக எலிமினேட்டானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கடைசி கட்டத்தில், நான்காவது இடத்திற்காக கொல்கத்தா, மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 


இந்நிலையில், இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி, இந்த போட்டியிலும், அடுத்து நடக்க இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் டாப் இரண்டில் நிறைவு செய்யும் முனைப்பில் விளையாடும். ஹைதராபாத் அணியைப் பொருத்தவரை, இந்த சீசனில் 12 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றியை ஈட்டியதுள்ளது. இதனால், பெங்களூரு, மும்பை என இரண்டு அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்ய போராடும் என தெரிகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.