நடப்பு ஐபிஎல் சீசனின் 45-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இரு அணிகளுக்கும் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள வெற்றி பெறுவது அவசியம். இதனால், வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் விளையாடும். இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. 


முதலில் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஓப்பனிங் களமிறங்கினர். பவுண்டரியோடு போட்டியை தொடங்கினார் வெங்கடேஷ் ஐயர். ஆனால், ஹர்ஷதீப் சிங் வீசிய 4வது ஓவரில் கில் க்ளீன் பவுல்டாகி வெளியேறினார். அவரை அடுத்து, திரிபாதி களமிறங்கினார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்திருந்தாலும் இன்னொரு பக்கம் பவுண்டரிகளை விளாசி வந்த வெங்கடேஷ் ஐயர், அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.


கொல்கத்தாவை மீட்டெடுத்த வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி இணை:


கில் அவுட்டானதை தொடர்ந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், திரிபாதி இணை பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 35 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து கொல்கத்தாவை மீட்டனர். இதனால் 10 ஓவர்களில் முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல ஸ்கோருக்கான அடித்தளம் போட்டது கொல்கத்தா அணி. 






சிறப்பாக விளையாடி வந்த கொல்கத்தாவின் பேட்டர்களை பிஷ்னாயின் கூக்ளி பிரித்தது. 34 ரன்களுக்கு திரிபாதி அவுட்டானார். ஆனால், தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வந்த வெங்கடேஷ் ஐயர் 39 பந்துகளில் அரை சதம் கடந்தார். அவரை அடுத்து களமிறங்கிய மோர்கன் 2 ரன்களுக்கு வெளியேறிய, ரானாவும், தினேஷ் கார்த்திக்கும் கடைசி ஓவர்களை எதிர்கொண்டனர். 


பஞ்சாப் பெளலர்களைப் பொருத்துவரை, பிஷ்னாய் (2), ஹர்ஷதீப் சிங் (3), ஷமி (1)ஆகியோர் விக்கெட்டுகளை எடுத்தனர். கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் ஆடும்போது முட்டுக்கட்டைப் போட்டு விக்கெட்டுகள் எடுத்தனர். கடைசி 5 ஓவர்களில், அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் சரிந்தது. இதனால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. 


நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டிகளில், யார் ஆதிக்கம்?


ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் அணி 9 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 19 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. போட்டி இன்று நடைபெறும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் மோதிக்கொள்வது இதுவே முதன்முறை ஆகும்.


இரு அணிகளும் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் பஞ்சாப் அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளும் இதற்கு முன்பு 1 போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் 6 போட்டியிலும், பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்த 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 2வதாக பேட்டிங் செய்து 4 போட்டியிலும், கொல்கத்தா அணி சேசிங் செய்து 13 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.