ஐ.பி.எல். தொடரின் 38வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் மோத உள்ளது. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சென்னை அணியும், 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் மோதுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதற்கு முன்பு இதுவரை 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 16 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டியில் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்னதாக 1 போட்டியில் மோதியுள்ளன. இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடந்த 5 போட்டியில் 4 போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 4 போட்டியிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர். நடப்பு ஐ.பி.எல், தொடரில் இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது.
சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்த 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி இரண்டாவது பேட்டிங் செய்த 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி இரண்டாவதாக பேட்டிங் செய்த 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்சமாக சென்னை அணி சார்பில் சுரேஷ் ரெய்னா 109 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்துள்ளார். சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி சார்பில் சென்னை அணிக்கு எதிராக மன்வீந்தர் பிஸ்லா அதிகபட்சமாக ஒரே போட்டியில் 92 ரன்களை குவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக இதுவரை சுரேஷ் ரெய்னா 736 ரன்களை குவித்துள்ளார். கொல்கத்தா அணி சார்பில் சென்னை அணிக்கு எதிராக இதுவரை அதிகபட்சமாக பிரண்டன் மெக்கல்லம் 346 ரன்களை குவித்துள்ளார்.
ஒரு போட்டியில் அதிகபட்சமாக சென்னை அணிக்காக பவான் நெகி 22 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக பிராட்ஹாக் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக அதிகபட்சமாக சென்னை அணிக்காக அஸ்வின் 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் அதிகபட்சமாக 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா அணியும் எப்போது மோதிக்கொண்டாலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.