2022ல் இன்ஸ்டாகிராமின் டாப் 5 விளையாட்டு கிளப்களின் பட்டியலில் ஐபிஎல் தொடரில் உள்ள ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணி இடம்பிடித்துள்ளது. இதையடுத்து, உலகளவில் இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே அணி என்ற பெருமையை ஆர்சிபி அணி பெற்றுள்ளது. 


இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர்களில் இடம்பெற்றுள்ள மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்று ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இந்தநிலையில், இந்த அணி கடந்த ஆண்டு மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்று என்ற தனித்துவமான சாதனையை படைத்துள்ளது. 


2022 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான விளையாட்டு இன்ஸ்டாகிராம் கணக்குகளில் முதல் 5 இடங்களில் உள்ள ஒரே இந்திய விளையாட்டு அணி இதுவாகும். மேலும், விராட் கோலி 2022ம் ஆண்டியில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர் ஆவார். கோஹ்லியைப் போலவே, ஆர்சிபி அணி இன்ஸ்டாகிராமில் 2022 இல் உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் அணியாகும்.


கடந்த 2022 ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக மக்கள் விரும்பிய விளையாட்டு கிளப்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், ஆர்சிபி உலகின் ஐந்தாவது பெரிய அணியாக இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஐரோப்பிய கால்பந்து கிளப்புகள் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. 


பிரபல கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணி 209 பில்லியன் மக்கள் விரும்பியதில் முதலிடத்திலும், பார்சிலோனா அணி178 பில்லியன் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளது. தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் (141 மில்லியன்) மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (107 மில்லியன்) பெற்று மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் ஆர்சிபி 948 மில்லியன் பெற்று 5வது இடத்தில் உள்ளது. 


இதன்மூலம், இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே கிரிக்கெட் அணி மற்றும் ஒரே இந்திய அணி என்ற பெருமையை ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணி பெற்றுள்ளது. 






அதிக இன்ஸ்டாகிராம் பாலோவர்களை கொண்ட அணிகள்:


இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் அடிப்படையில் ரியல் மாட்ரிட் மிகப்பெரிய விளையாட்டு அணியாகும், இது சுமார் 131 மில்லியன் மக்களால் பின்தொடர்கிறது. 116 மில்லியன் இன்ஸ்டா பின்தொடர்பவர்களுடன் பார்சிலோனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல்லில் அதிக இன்ஸ்டா ஃபாலோயர்களைக் கொண்ட அணி மும்பை இந்தியன்ஸ் ஆகும், அவர்களை சுமார் 10.9 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சுமார் 1.07 கோடி) இரண்டாவது இடத்திலும், ஆர்சிபி (சுமார் 94 லட்சம்) மூன்றாவது இடத்திலும் உள்ளன.


மகளிர் ஐபிஎல் அணி:


மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது பெண்கள் அணியை களமிறக்கியுள்ளது. பெங்களூரு அணியை பெங்களூரு சேலஞ்சர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ901 கோடிக்குகைப்பற்றியுள்ளது. 


மகளிர் ஐபில் தொடரின் முதல் பதிப்பில் ஐந்து அணிகளுக்கு இடையே மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும். அனைத்து போட்டிகளும் மும்பையில் உள்ள பார்பர்ன் மைதானம் மற்றும் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும். இந்த லீக் போட்டிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி கடைசி வாரத்தில் முடியும் என தெரிகிறது. இந்த லீக் இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். WPL மூலம் பிசிசிஐக்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஐந்து அணிகள் விற்பனை மூலம் ரூ.4,669.99 கோடி கிடைத்த நிலையில், ரிலையன்ஸின் வயாகாம் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஊடக உரிமையை ரூ.951 கோடிக்கு வாங்கியது.