ஐ.பி.எல் 2024:


.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி பெங்களூருவில் உள்ள சின்னஸ்வாமி மைதானத்தில் இன்று(மே4) 52 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்மன் சாஹா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினார்கள்.


அதிரடியான ஆட்டத்தை அந்த அணிக்கு இவர்கள் அமைத்துக்கொடுப்பர்கள் என்ரு எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். விருத்மன் சாஹா 7 பந்துகளில் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல், சுப்மன் கில் 7 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் களம் இறங்கிய சாய் சுதர்சனும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 14 பந்துகள் களத்தில் நின்ற சாய் சுதர்சன் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவ்வாறாக பவர்ப்ளே முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


147 ரன்களுக்கு ஆல் அவுட்:


பின்னர் வந்த ஷாருக்கான் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் நிதானமாக விளையாடி தத்தளித்துக் கொண்டிருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி மீட்டனர். இவர்களது ஜோடி மெல்ல ரன்களை சேர்க்க 4 விக்கெட்டுக்கு 80 ரன்களை எடுத்தது குஜராத் அணி. அப்போது டேவிட் மில்லர் விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 20 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 30 ரன்கள் எடுத்தார். அதேபோல் ஷாருக்கான் 24 பந்துகள் களத்தில் நின்று 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 37 ரன்கள் எடுத்தார்.  அடுத்தாக களம் இறங்கிய ராகுல் தெவாடியா ரஷீத் கான் ஜோடி ஓரளவிற்கு நன்றாக விளையாடினார்கள். இதில் ராகுல் தெவாடியா 35 ரன்களும், ரஷீத் கான் 18 ரன்களும் எடுத்தனர்.


பின்னர் வந்த விஜய் சங்கர் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க மனவ் சுதர், மோகித் சர்மா மற்றும் நூர் அகமது அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இவ்வாறாக 19.3 ஓவர்கள் முடிவின் படி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து குஜராத் டைட்டன்ஸ் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்குகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. பெங்களூரு அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை முகமது சிராஜ், யாஸ் தயாள் விஜயகுமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.