ஐபிஎல் 2024ல் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. கடந்த மே 1ம் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 






இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி , 5 தோல்வியுடன் 5வது இடத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில் ராஜாவாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டுமே உள்ளது. இதுவரை ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ள முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டுமே உள்ளது. இந்த அணியை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 2வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய, கொல்கத்தா மீதமுள்ள 4 போட்டிகளில் 1ல் வெற்றி பெற்றால் கூட போதுமானது, 


இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் பிளேஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதிபெற என்ன செய்ய வேண்டும்..? 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மட்டுமே உள்ளது. சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணியை தர்மசாலாவில் எதிர்கொள்கிறது. அதனை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மர்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிரான விளையாட இருக்கிறது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தற்போது ஐந்து வெற்றிகளில் 10 புள்ளிகளுடன் உள்ளது. 16 புள்ளிகளைப் பெற அவர்கள் மீதமுள்ள நான்கு போட்டிகளில் குறைந்தது மூன்றில் வெற்றி பெற வேண்டும். ஐபிஎல் 2024 ப்ளேஆஃப்களுக்கு தகுதி பெற ஒரு அணிக்கு குறைந்தபட்சம் 16 புள்ளிகள் தேவை.


லக்னோ (ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 3வது இடம்) மற்றும் ஹைதராபாத் (ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 4வது இடம்), இருவரும் 6 வெற்றிகளில் 12 புள்ளிகள் பெற்றுள்ளனர். மேலும் ஐபிஎல் 2024 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (ஐபிஎல் புள்ளிகள் அட்டவணையில் 5 வது இடம்) ஐபிஎல்லில் அடுத்த போட்டியில் ஹைதராபாத் லக்னோவை வீழ்த்த வேண்டும். ஏனென்றால், தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4வது இடத்தில் உள்ளது. லீக் கட்டத்தின் முடிவில் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் ஐபிஎல் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இருப்பினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுவதற்கு முன்பு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் தோல்வியை சந்திக்க வேண்டும்.