லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 145 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.


ஐ.பி.எல் 2024:


.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 30) 48 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்றது. அந்தவகையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.


ஏமாற்றிய ரோகித் சர்மா:


 


மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினார்கள். ஹிட்மேன் ரோகித் சர்மாவின் பிறந்த நாள் இன்று என்பதால் இன்றைய போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் ரசிகர்கள் ஏமாற்றம் அடையும் விதமாக வெறும் 4 ரன்களில் மொஹ்சின் கான் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த சூர்யகுமார் 10 பந்துகள் களத்தில் நின்று ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே எடுத்து 6 ரன்களில் நடையைக்கட்டினார். மறுபுறம் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தார் இஷான் கிசன். அதனைத்தொடர்ந்து களம் இறங்கிய திலக் வர்மா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.


145 ரன்கள் இலக்கு:


பவர்ப்ளே முடிவதற்ககுள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடர் விக்கெட்டுகளால் திணறிக்கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரன்களை சேர்த்து கொண்டிருந்த இஷான் கிசனும் ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 36 ரன்கள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 32 ரன்கள் எடுத்தார். பின்னர் நேஹால் வதேரா மற்றும் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தனர். இதில் நேஹால் வதேரா அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். இவர் மொத்தம் 41 பந்துகள் களத்தில் நின்றார். அந்தவகையில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 46 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் 32 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்க உள்ளது.