DC Vs GT, IPL 2024: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப்ரல் 24) நடைபெறும் போட்டியில் விளையாடி வருகின்றன.
ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 39 லீக் போட்டிகள் நடைபெற்ற முடிந்துள்ள நிலையில் இன்று ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்:
டெல்லி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் மூன்றில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவது கட்டாயம். நடப்பு தொடரில் ஏற்கனவே குஜாராத் உடன் மோதிய போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. அதே உத்வேகத்தில் இன்றைய போட்டியிலும் அந்த அணி களமிறங்கி உள்ளது.
குஜராத் அணியோ இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் நான்கில் வென்று, புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் நீடிக்கிறது. தொடர் வெற்றிகளை பெற முடியாமல் அந்த அணி தடுமாறி வருகிறது. பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவது இந்த அணிக்கும் கட்டாயம். நடப்பு தொடரில் டெல்லிகு எதிரான முதல் போட்டியில் 17.3 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே எடுத்து குஜராத் டைட்டன்ஸ் மோசமான தோல்வியை பதிவு செய்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் நிச்சயம் டெல்லி அணியை வீழ்த்தும் முனைப்பில் களம் இறங்குவதால் போட்டி விறுவிறுப்புடன் இருக்கும்.
டாஸ் வென்ற குஜராத் அணி:
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் முதலில் பேட்டிங்கை தொடங்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி அதிரடி ஆட்டத்தை தொடங்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் (பிளேயிங் லெவன்):
பிருத்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர் - கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்
குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்):
விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர் ), சுப்மான் கில்(கேப்டன்), டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, மோகித் சர்மா, சந்தீப் வாரியர்