ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஏபி டி வில்லியர்ஸ் இல்லாதது குறித்து மனம் திறந்த விராட் கோலி.
இந்தாண்டு ஐ.பி.எல். திருவிழாவில் மிஸ்டர்.360 ஏபி டி வில்லியர்ஸ் (AB De Villiers) டெல்லி டேர்டெவிஸ் அணிக்காக விளையாடுகிறார். ஐ.பி.எல். போட்டிகள் 2011 ஆன் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடினார். பெங்களூர் அணியின் வெற்றிக்கு தனியொரு ஆளாய் களத்தில் நின்று, தனத் அதிரடியால் அணியை வெற்றி பாதைக்கு திருப்பி தருணங்களின் பெருமைக்குரியர் இவர், இந்தாண்டி டாடா ஐ.பி.எல். 2022 இல் டி வில்லியர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாய் அமைந்தது. விராட் கோலியும் இது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
இப்போது, ஏபி டி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடமாட்டர் என்று முந்தைய சீசனிலேயே தான் அறிந்திருந்ததாக விராட் கோலி கிரெட் பீ என்ற தளத்திற்கு கொடுத்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஏபி டி வில்லியர்ஸ் இது குறித்து விராட் கோலிக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் குறித்தும் பேசியுள்ளார்.
விராட் கோலியும், டி வில்லியர்சும் களத்தில் மட்டும் சிறந்த பார்டனர்ஸ் இல்லை. களத்திற்கு வெளியில் இருவரும் சிறந்த நண்பர்கள். ஐ.பி.எல்.போட்டிகளில் விராட், டி வில்லியர்ஸ் ஆட்டம் அனைருக்கும் ஒரு விருந்தாக இருக்கும். இருவரின் பார்ட்னர்ஷிப் என்றால் எதிரணியினர் திணிறிவிடுவார்கள். இருவருக்கும் இடையே அன்பு மிக்க ஒரு பாண்ட் எப்போதும் தொடர்வதை நாம் அடிக்கடி போட்டிகளில் பார்க்க முடியும். டி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாடவில்லை என்றதும், ரசிகர்கள் ஏபி டி வில்லியர்ஸ்-ஐ ரசிகர்கள் எவ்வளவு மிஸ் செய்தார்களோ, போலவே விராட்டும் டி வில்லியர்சை மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.
டி வில்லியர்ஸ், ஐ.பி.எல்.-ல் தான் பெங்களூர் அணிக்காக விளையாட போவதில்லை என்பது பற்றி விராட் கோலிக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் குறித்து விராட் கோலி கூறுகையில், "இந்த முடிவை டி வில்லியர்ஸ் எடுத்த நாள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. உலக் கோப்பை போட்டிகள் முடிந்து நான் வீடு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது, டி வில்லியர்ஸ் எனக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தார். நான் அதைக் கேட்டேன். அதில் அவர், வரும் சீசனில் பெங்களூர் அணிக்காக விளையாட மாட்டேன் என்றார். அந்த மெசேஜ்களை அனுஷ்காவிடம் காண்பித்தேன். உடனே, என் முக மாறுதலைப் புரிந்து அவர், அதிர்ச்சியுடன், என்னிடம் சொல்லாதே! என்பது போன்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்” என்றார்.
மேலும், டி வில்லியர்ஸ் இந்த முடிவை எடுப்பார் என்பது பற்றி தொடர்ந்து பல ஹிண்ட்களை வழங்கியால் தனக்கு முன்னரே யூகித்திருந்தேன் என்று கூறுகிறார் விராட். "கடந்த ஐபிஎல்-ல் இப்படி ஏதாவது நடக்கும் என யூகித்தேன். ஏனென்றால் அவர் என்னிடம் 'இந்த சீசன் முடிவதற்குள்,உன்னுடன் காபி சாப்பிட வேண்டும்.’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார். டி வில்லியர்ஸ் வழக்கமாக இப்படியெல்லாம் பேச மாட்டாரே என நான் யோச்சித்தேன். நான் பதட்டமாக இருந்தேன். ஏதோ ஒன்று நடக்க இருக்கிறது. ஏன் இப்படி சொல்றீங்கன்னு அவரிடம் கேட்டேன். அவர், எதுவும் இல்லை என்றார். நாங்கள் எப்போதும் தொடர்பில் இருப்பவர்கள். ஆனால் ஏன் இப்படி பேசுகிறார் என்று நினைத்துக் கொண்டேன்.” என்றார்.
டி வில்லியர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடாதது குறித்து கூறுகையில், "இது ஒரு விசித்திரமான உணர்வு. எங்கள் அணியில் டி வில்லியர்ஸ் இல்லை என்பது என்னை உணர்ச்சிவசப்பட வைக்கிறது. எங்களுக்கு அவர் எல்லாமுமாக இருந்திருகிறார். நாங்கள் எப்போதும் ஒன்றாகவே இருந்து இருக்கிறோம். அணியில் வெற்றி, தோல்வி என எல்லா தருணங்களிலும் அவர் என்னுடன் இருந்திருக்கிறார். இப்போது அவர் எங்களுடன் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.” என்றார்.
"நாங்கள் (ஆர்.சி.பி.) இந்த ஐ.பி.எல். போட்டில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடிந்தால், அவர்தான் முதலில் என் நினைவுக்கு வருவார். நாங்கள் வென்றால் எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்குமோ, அதே அளவு டி வில்லியர்ஸ் மகிழ்ச்சி அடைவார். எங்கள் வாழ்க்கையில் டி வில்லியர்ஸ் பங்களிக்கவில்லை என்று சொல்லக்கூடிய ஒருவர் எங்கள் அணியில் இருப்பதல நினைக்கவில்லை," என்று தன் நினைவுகளை நெகிழ்ச்சியுடம் பகிர்ந்து கொண்டார்.
தென்னாப்ரிக்க அணி வீரரான டி வில்லியர்ஸ், உலக அளவில் உள்ள கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் சிறந்த வீரர்களுள் ஒருவர். இவரை ரசிகர்கள் மிஸ்டர் 360 என்று அழைப்பார்கள். இவர், 360 டிகிரி கோணங்களில் பந்தை சிதறடிப்பார் என்பதால் இந்தப் பெயர். இவர் ஆடும் போதும் பந்துவீச்சாளர்கள் எந்தப் பக்கம் பந்தை வீசுவது என குழம்பிப் போவார்கள். ஏனெனில் வலது பேட்டை பிடித்துக்கொண்டு நிற்கும் வில்லியர்ஸ், பந்துவீச்சாளர் ஓடி வந்துகொண்டிருக்கும் போது திடீரென இடது, வலது என மாறி மாறி திரும்புவார். அப்போது எந்தத் திசையில் பந்து வருகிறதோ, அதே திசையில் பந்தை பறக்கவிடுவது இவரது தனிச்சிறப்பு.
டி வில்லியர்ஸ், 2004ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி இங்கிலாந்திற்கு எதிராக தென்னாப்ரிக்க அணி விளையாடிய டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் அறிமுகமானர். 17ஆம் தேதி அறிமுகமான இவரது, ஜெர்ஸி எண்ணும் 17 தான். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகள், 228 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் இன்னும் கூட இவரது ஆட்டத்தில் அதிரடி குறையவில்லை. டி வில்லியர்ஸ் என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.