தன் பவுலிங்கில், ஹர்திக் பாண்டியா அவுட் ஆனதை கொண்டாடாத பாச சகோதரர் குர்னால் பாண்டியா.
ஐ.பி.எல். தொடரின் 4வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. ஐ.பி.எல். தொடரில் முதன்முறையாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா 2022 ஐ.பி.எல். சீசனுக்கு முன்பு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தனர். ஐந்து முறை ஐ.பி.எல். சாம்பியன்களாக மும்பை அணியில் விளையாடிய சகோதரர்கள் இந்த முறை எதிர் எதிர் அணிகளில் விளையாட ஒப்பந்தமாகினர்.
இந்நிலையில், நேற்றைய போட்டியில், ஹர்திக் பாண்டியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு ரன் சேர்க்கும் முயற்சியில் இருந்தார். அப்போது, பார்ட்னர்ஷிப்பை கலைக்க கே.எல். ராகுல் சகோதர்களில் ஒருவரான குர்னால் பாண்டியாவுக்கு பவுலிங் கொடுத்தார். ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்த்தை ஏற்படுத்திய இந்த ஆட்டத்தில், 10வது ஓவரில் ,ஹர்திக் பாண்டியா 28 பந்துகளுக்கு 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குர்னால் பாண்டியாவின் சுழலில் அவுட் ஆனார்.
ஹர்திக் பாண்டியா பெரும் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில், குர்னால் பாண்டியா அவர் சகோதரர் ஆட்டமிழந்ததை கொண்டாடுவாரா மாட்டாரா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, குர்னால் பாண்டியா தனது இரு கைகளாலும் தனது முகத்தை மறைத்துக்கொண்டு, தனது பாசக்காரர் சகோதரரின் அவுட்டை புன்சிரிப்புடனும், சற்றே வருத்ததுடனும் வெளிப்படுத்தினார்.
விளையாட்டு என்பதே ஸ்போட்ஸ்மேன்ஷிப் மற்றும் ஸ்போர்ட்டிவ்னஸ் தானே, இல்லையா! அதுபோல, சகோதரர்களாகிய ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா எதிர் எதிர் அணியில் விளையாடினாலும், தன் சகோதரர் தன் பவுலிங்கில் அவுட் ஆவதை பெரிதாக கொண்டாடவுமில்லை குர்னால். அதேசமயம், தன் சகோதரர் குர்னால் பவுலிங் அவுட் ஆகியவதை பெரிய மன வருத்தமாகவும் கருதவில்லை ஹர்திக். அப்படியான ஸ்போட்டிவ் சூப்பர் ப்ரோஸ் இவங்க.
இது குறித்து போஸ்ட் மேட்ச் பிரசண்டேசனில், ஹர்திக் பாண்டியா கூறுகையில், குர்னால் என் விக்கெட்டைப் எடுத்ததால் எங்களுக்குள் எதுவும் மாறிவிடாது. மேலும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது குஜராத் லயன்ஸ்தான். ஒருவேளை லக்னோ அணி வென்றிருந்தால் நிலைமை மாறியிருக்கும். ஆனால், நாங்கள் எப்போதும் சகோதரர்கள்தான்.’ என்றார்