HPCA Stadium in Dharamshala: இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் கிட்டத்தட்ட அதன் இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. ஐ.பி.எல். தொடரினால் தான் இழந்த அல்லது தனது கைவிட்டுப்போன இடத்தினை தக்கவைக்க முயற்சித்து வெற்றி பெற்ற வீரர்களை நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு மைதானம் மீண்டு வந்துள்ள கதையைப் பற்றி தான் நாம் இன்றைக்குப் பார்க்க உள்ளோம். 


டெல்லி - பஞ்சாப்:


ஐ.பி.எல். தொடரில் இன்று அதாவது பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வரை போட்டிகள் அவ்வப்போது நடைபெற்று வந்தன. அதற்கு பின்னர் தான் இந்த மைதானம் ஒரு உள்ளூர் போட்டி கூட நடத்தப்படமுடியாமல் இருந்தது. 


அதற்கு காரணம் மைதனத்தினை ஹிமாச்சல பிரதேச அரசு கடந்த 2013ஆம் ஆண்டு ஆக்டோபர் மாதம் 26ஆம் தேதி நள்ளிரவில் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டது. இது ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோஷியேசனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அதுவரை இந்த மைதானம் ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் அசோஷியேசன் வசம் இருந்தது. அதன் பின்னர் இந்த மைதானம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.


கிரிக்கெட் ஆர்வம்:


உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால் மைதானத்தின் அவுட் - ஃபீல்டில் புட்கள் இல்லாமல் இருந்ததால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. 


இந்நிலையில் இந்த மைதானத்தில் இன்று இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் 64வது போட்டியும் 66வது போட்டியும் நடத்தப்படவுள்ளது. இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்களுக்கு இயல்பாகவே கிரிக்கெட் போட்டியின் மீதான ஆர்வம் என்பது குறைவாகவே உள்ளது. அதற்கு காரணம் அங்குள்ள மக்களுக்கு கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வம் தான் அதிகமாக உள்ளது.  இதனால் மைதானத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் இருக்கும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வடகிழக்கு மாநிலங்களிலும் மக்களுக்கு கிரிக்கெட் ஆர்வத்தினை தூண்டுவதற்கான முயற்சியில் இரண்டு போட்டிகளை இங்கு நடத்துகிறது. 


23 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவிலான சிறிய மைதானமான இந்த மைதானத்தில் இன்றைக்கு மட்டும் 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.