ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 27 கோடியால் வாங்கப்பட்ட நிலையில் அவரது சம்பளத்தில் எவ்வளவு வரி இந்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.
ஐபிஎல் ஏலம் 2025:
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைப்பெற்றது. இந்த ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியது.
இந்த் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ரிஷப் பண்ட்டை வாங்க போட்டி போட்டது. 20.75 கோடிக்கு ஏலத்தில் பண்ட்டை எடுப்பதாக லக்னோ அணி இருந்த நிலையில் ஆர்டிஎம் கார்ட்டை உபயோகிக்க போவதாக டெல்லி அணி அறிவித்தது. ஏலம் கேட்பவர் லக்னோ அணி உரிமையாளரிடம் பண்ட்டை எவ்வளவு விலை அதிகப்பட்சமாக கொடுத்து வாங்க முடியும் என்று கேட்ட போது, லக்னோ அணி 27 கோடி என்று அதிரடியாக கூறியது, டெல்லி அணியிடம் இதை கேட்டவுடன் ஆர்டிஎம் கார்ட்டை பயன்படுத்தவில்லை என்று கூறி பின் வாங்கியது. இதன் மூலம் ஒட்டு மொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக மாறினார் ரிஷப் பண்ட்.
லக்னோ அணிக்கு கேப்டன் பண்ட்:
இதன் மூலம் லக்னோ அணிக்கு கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்படலாம் என்று ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுலை லக்னோ அணிக்கு கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு வரி:
என்னதான் லன்னோ அணி ரிஷப் பண்ட்டை 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தாலும் அவருக்கு அந்த முழு பணமும் சம்பளமாக போகாது. அவருடைய சம்பள பணத்தில் இருந்து 8.1 கோடியை இந்திய அரசுக்கு வரியாக சென்றுவிடும். மீதமுள்ள 18.9 கோடி பணம் மட்டும் அவருக்கு சம்பள பணமாக வரும். இதன் மூலம் ரிஷப் பண்ட் மூன்று ஆண்டுகளுக்கு லக்னோ அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் ஆண்டுக்கு அவருக்கு 18.9 கோடி ரூபாய் சம்பள தொகையாக வழங்கப்படும்.