ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் எடுத்தது. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குயிண்டன் டி காக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 70 பந்துகளில் 10 சிக்சர் மற்றும் 10 பவுண்டரிகள் உதவியுடன் 140 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 


இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் தற்போது வரை அடிக்கப்பட்ட அதிகமான தனி நபர் ஸ்கோர்கள் என்னென்ன?


கே.எல்.ராகுல் (132*):


2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் கே.எல்.ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் விளாசினார். 


ஏபிடிவில்லியர்ஸ்(133*):


2015ஆம் ஆண்டு தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கிய டிவில்லியர்ஸ் 59 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசி 133* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 


 






குயிண்டன் டி காக்(140*):


நடப்புத் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குயிண்டன் டி காக் 70 பந்துகளில் 10 சிக்சர் மற்றும் 10 பவுண்டரிகள் உதவியுடன் 140 ரன்கள் எடுத்தார். 


பிரண்டன் மெக்கலம்(158*):


முதல் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா-ஆர்சிபி அணிகள் மோதின.அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக களமிறங்கிய மெக்கலம் 158 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் தொடரில் நீண்ட நாட்கள் அது அதிகபட்சமான ஸ்கோராக இருந்தது. 


கிறிஸ் கெயில்(175*):


2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆர்சிபி-புனே வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அதில் ஆர்சிபி அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 66 பந்துகளில் 175* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண