2022 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஐந்தாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி மோதி வருகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.
ஓப்பனிங் களமிறங்கிய குஜராத் அணிக்கு ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஷாக் கொடுத்தனர். இதனால், பவர்ப்ளே முடிவதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரில், ஓப்பன்ர் சுப்மன் அவுட்டாகி வெளியேறினார். ஆனால், மூன்று விக்கெட்டுகளை இழந்தும் தடுமாற குஜராத் அணி மீண்டு வந்தது.
கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பொறுப்பான ஆட்டத்தால், அபினர் மனோகரின் பங்களிப்பால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 43 ரன்கள் எடுத்திருந்தபோது அபினவ் மனோகர் அவுட்டாகி அரை சதம் மிஸ் செய்தார். ஆனால், 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்டியா, 87* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசியாக ஹர்திக்குடன் ஜோடி சேர்ந்திருந்த டேவிட் மில்லர் 31 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு குஜராத் அணி 192 ரன்கள் எடுத்து அசத்தி இருக்கிறது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்திக், சில ரெக்கார்டுகளையும் தன்வசப்படுத்தி இருக்கிறார். 2022 ஐபிஎல்லில் இதுவரை, அதிக ரன்கள் அடித்திருக்கும் கேப்டன் என்ற பட்டியலில் முன்னிலை பெற்றிருக்கிறார்.
228 - ஹர்திக் பாண்டியா*
146 - டுப்ளிசி
132 - ராகுல்
123 - ஸ்ரேயாஸ் ஐயர்
110 - ரிஷப்
108 - ரோஹித்
107 - கேன்
106 - சஞ்சு சாம்சன்
94 - மயாங்க்
66 -ஜடெஜா
ராஜஸ்தான் வெற்றிப்பெற 193 ரன்கள் எடுக்க வேண்டும். சவாலான போட்டியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்