தமிழ்நாடு மக்கள் அனைவரும் இன்று சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதன்காரணமாக பல அரசியல் தலைவர்கள், பிரதமர் மோடி உட்பட பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகிய இருவரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரன் உடன் வாழ்த்தை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வாஷிங்டன் சுந்தர் தமிழில் பூரனுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் கூற சொல்லி தரும்” காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை கேட்டு நிகோலஸ் பூரன் அழகாக தமிழில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்திய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னதாகசென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் வாழ்த்து ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஒரு தினசரி நாள்காட்டி போல் ஒரு படம் பதிவிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், “எட்டுத்திக்கும் இன்பம் பெருக , உள்ளங்கள் எங்கும் உவகை பொங்க , அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! ” எனப் பதிவிடப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் உடன் வீரர்களின் பெயருடன் அவர்களுக்கு ராசி பலன் போல் சில வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் சென்னை அணியின் வீரர்கள் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஹரி சங்கருடன் டேவான் கான்வே ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வேகமாக வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்