ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ,களமிறங்க உள்ள வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


ஐபிஎல் சீசன்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 61 லீக் போட்டிகள் முடிந்த பிறகும் இதுவரை எந்தவொரு அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. முன்னணியில் இருந்த குஜராத் மற்றும் சென்னை அணிகள் கூட தோல்வியை சந்தித்து தனக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் தான் இன்று நடைபெறும் லீக் போட்டி, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


டாஸ் வென்ற ஐதராபாத் அணி


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நடப்பு தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக குஜராத் இருக்கும். அதேநேரம், புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் ஐதராபாத் அணி,  மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இதன் காரணமாக வாழ்வா, சாவா எனும் சூழலில் இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி களமிறங்குகிறது. இந்த சூழலில் இரு அணிகளின் சார்பில் களமிறங்கும் பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


குஜராத் டைட்டன்ஸ் :


விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், சாய் சுதர்ஷன், தசும் ஷனகா, ராகுல் திவேதியா, ரஷித் கான், மோகித் சர்மா, முகமது ஷமி, நூர் அகமது


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


யாஷ் தயாள், கே. எஸ். பாரத், தர்ஷன், சாய் கிஷோர், சிவம் மாவி


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :


அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம் (கேப்டன்),அப்துல் சமத், சன்விர் சிங், ஜான்சென், டி நடராஜன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹக் ஃபரூக்கி


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


அன்மோல்ப்ரீத் சிங், கிளென் பிலிப்ஸ், ஹுசைன், மயங்க் தாகர், னிதிஷ் குமார் ரெட்டி


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை மட்டுமே மோதியுள்ளன. இதில் ஒரு போட்டியில் குஜராத் அணியும் ஒரு போட்டியில் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளன.  முதல் போட்டியில் ஐதராபாத் அணியும், இரண்டாவது போட்டியில் குஜராத் அணியும் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறை ஆகும்.