GT Vs RCB, IPL 2024: குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 44 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், வார இறுதியான இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, முதல் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்  மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோத உள்ளன.


குஜராத் - பெங்களூர் மோதல்:


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், மாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. குஜராத் அணி  இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் நான்கில் வென்று,  புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் இந்த அணி தோல்வியுற்றுள்ளது. . இதனால், இன்றைய போட்டியில் வென்று பிளே-ஆஃப் சுற்றுக்கான தனது வாய்ப்பை தக்க வைக்க  தீவிரம் காட்டுகிறது. பெங்களூர் அணியோ 9 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.  எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது குஜராத் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் பெரும் அதிரடி பட்டாளமே உள்ளது. ஆனாலும், கேப்டன் சுப்மன் கில், டேவிட் மில்லர், விருதிமான் சாஹா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தது அணிக்கு பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சிலும் ரஷித் கானை தவிர மற்ற விரர்கள் யாரும் நடப்பு தொடரில் குஜராத் அணியில் பெரிதாக சோபிக்கவில்லை. தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருந்த பெங்களூர் அணி, கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் வலுவான ஐதராபாத்தை வீழ்த்தி புத்துயிர் பெற்றுள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும், கடந்த போட்டியில் செயல்பட்டதை போன்றே செயல்பட்டால் இன்றைய போட்டியிலும் பெங்களூர் அணியால் வெற்றி வாகை சூட முடியும்.


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 3 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் குஜராத் அணி இரண்டு முறையும், பெங்களூர் அணி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.  பெங்களூர் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் குஜராத் அணி அதிகபட்சமாக 198 ரன்களையும், குறைந்தபட்சமாக 168 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், குஜராத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பெங்களூர் அணி அதிகபட்சமாக 197 ரன்களையும், குறைந்தபட்சமாக 170 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


அகமதாபாத் மைதானம் எப்படி?


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம்  வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சமமான சூழலை வழங்குகிறது.  இந்த சீரான தன்மை இரு அணிகளுக்கும் இடையே சமமான போட்டிக்கு வழிவகுக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக இருக்கும்.  டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்வது நல்லது.


உத்தேச அணி விவரங்கள்:


குஜராத்: விருத்திமான் சாஹா , ஷுப்மான் கில், கேன் வில்லியம்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, சந்தீப் வாரியர், மோகித் சர்மா 


பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கரண் ஷர்மா, லாக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது சிராஜ்