IPL 2023, Match 18, GT vs PBKS: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டி பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
குஜராத் அணியைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கவில்லை. மேலும் அந்த போட்டியில் குஜராத் அணி அதிர்ச்சிகரமாக தோல்வியைச் சந்தித்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிரான வெற்றிகளுடன் தொடங்கியது. இருப்பினும், தங்களது கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியை தழுவியது.
பஞ்சாப் அணியை பொறுத்தவரை, தங்களது தொடக்க இரண்டு போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக வென்றது. ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்தது.
நேருக்கு நேர்:
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை 2 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. இவர்கள் மோதிய இரண்டு போட்டிகளிலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் அணியைப் பொறுத்தவரையில் மிகவும் பலமான அணியாக உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் திறமையான இளம் படையினரை அதிகம் கொண்டுள்ள அணியாக உள்ளது. இந்த அணி நடப்புச் சாம்பியனாக மிகவும் வழுவாக காணப்படுகிறது. அதேபோல், 15 அண்டுகளாக கோப்பையை வெல்ல போராடிக் கொண்டுள்ள அணியாக இது உள்ளது. ஆனால் ஒரு கோர் டீம் ஆக பஞ்சாப் அணி ஒரு போதும் அமையாதது கோப்பையை வெல்லாததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் சிறப்பான பங்களிப்பை பஞ்சாப் அணி அளித்து வருகிறது.
இதுவரை 209 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான் 49 அரைசதங்களை விளாசியுள்ளார். இந்திய வீரர்களில் அதிக அரைசதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் இவர் தான் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல், ஒட்டுமொத்தமாக அதிக அரைசதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் இவர் டேவிட் வார்னருக்கு (57) அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் ஐபிஎல் வரலாற்றில் இரண்டு சதங்கள் விளாசியுள்ளார். அந்த இரண்டும் 2020ஆம் ஆண்டில் அடிக்கப்பட்டவை. அதேபோல் 728 பவுண்டரிகளை பறக்கவிட்டுள்ள ஷிகர் தவான் 144 சிக்ஸர்களையும் விளாசி வானவேடிக்கை காட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள் பலர் உண்டு. அவ்வரிசையில் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு தொடர்களில் விளையாடிய ஷிகர் தவான் தற்போது அணியில் இடம் பெறுவதில்லை.
இன்று (13/04/2023) குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கலாம். இன்றைய போட்டியில் அரை சதம் விளாசினால், அது அவருடைய 50வது அரைசதமாகும்.