ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய போட்டியில் க்ருனல் பாண்டியா தலைமையிலான லக்னோ அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது மாலை 4 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது.
காயம் காரணமாக கே.எல். ராகுல் ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகிய நிலையில், தம்பியை எதிர்த்து க்ருனல் பாண்டியா முதல் முறையாக கேப்டனாக களமிறங்கிறார்.
இந்தநிலையில், இரு அணிகளுக்கிடையேயான நேருக்கு நேர், அதிக ரன்கள், அதிக விக்கெட்கள் பற்றிய பட்டியலை இங்கு பார்ப்போம்.
நேருக்கு நேர்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் 3 முறை மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளது. அந்த மூன்று முறையும் குஜராத் அணியே வெற்றிபெற்றுள்ளது. இதனால், குஜராத் அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்து வருகிறது.
2022 ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் முதல் முறையாக மோதின. அந்த முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் 2022ம் ஆண்டில் பிளே ஆஃப்களில் மோதியது. அதிலும், குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த ஐபிஎல் சீசனிலும் லக்னோ அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அதிக ரன்கள்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சார்பில் கே.எல். ராகுல் (சி), ஆயுஷ் படோனி மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்துள்ளனர்.
வீரர்கள் | ரன்கள் |
கேஎல் ராகுல் | 76 |
ஆயுஷ் படோனி | 72 |
தீபக் ஹூடா | 84 |
அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் சார்பில் சுப்மன் கில், ராகுல் தெவாடியா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிக ரன்கள் எடுத்துள்ளனர்.
வீரர்கள் | ரன்கள் |
சுப்மன் கில் | 63 |
ராகுல் தெவாடியா | 42 |
ஹர்திக் பாண்டியா | 110 |
அதிக விக்கெட்கள்:
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் இருந்து, க்ருனால் பாண்டியா, மார்க் வுட் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் அதிக விக்கெட்கள் எடுத்துள்ளனர்.
வீரர்கள் | விக்கெட்டுகள் |
க்ருணால் பாண்டியா | 4 |
அவெஷ் கான் | 3 |
அதே சமயம் முகமது ஷமி மற்றும் ரஷித் கான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
வீரர்கள் | விக்கெட்டுகள் |
முகமது ஷமி | 4 |
ரஷித் கான் | 6 |
மோஹித் ஷர்மா | 2 |
முழு அணி விவரம்:
குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் டெவாடியா, விஜய் ஷங்கர், மொஹம்மர் ஷமி ஜோசப் , யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாதவ், ஆர் சாய் கிஷோர், நூர் அகமது, கேன் வில்லியம்சன், ஒடியன் ஸ்மித், கேஎஸ் பாரத், சிவம் மாவி, உர்வில் பட்டேல், ஜோஷ் லிட்டில், மோஹித் சர்மா
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: க்ருனல் பாண்டியா (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், நிக்கோலஸ் பூரன், யாஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்பர்ட், டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, பிரேராக் மன்கட், ஸ்வப்னில் சிங், நவீன் உல் ஹக், யுத்வீர் சரக்