ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை ராகுல் தலைமையிலான லக்னோ அணி எதிர்கொண்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த இரண்டு அணிகள், தனது முதல் போட்டியில் விளையாடி வருகின்றன.


இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல் ராகுல் வந்த வேகத்தில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே டக்-அவுட்டாகி வெளியேறினார். ஷமி இந்த போட்டியின் முதல் விக்கெட்டை எடுத்தார். அதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சொதப்பினர். இதனால், 29-4 என்ற நிலையில் லக்னோ திணறியது. 


லக்னோ அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், அதனை அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி கூட்டணி அதிரடியாக ரன் சேர்த்தது. இரு வீரர்களும் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தீபக் ஹூடா (55) ரன்களும், ஆயுஷ் படோனி (54) ரன்களும் எடுத்தார். இதனால், 20 ஓவர் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு லக்னோ அணி 158 ரன்கள் எடுத்திருக்கிறது. இதனால், போட்டி ஆரம்பத்தில் திணறிய லக்னோ அணி, சவாலான ஒரு ஸ்கோரை எட்டி 150+ இலக்கை குஜராத் அணிக்காக நிர்ணயித்திருக்கிறது.






குஜராத் அணியைப் பொறுத்தவரை, ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் ஆரன் 2 விக்கெட்டுகளும், ரஷித் கான் 1 விக்கெட்டும் எடுத்திருக்கின்றனர். 




மேலும் படிக்க: Jio Calender Month Validity : இனிமே 28 நாள் பேக் இல்லை.. ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்திய கேலண்டர் மாதத் திட்டம்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண