ஐபிஎல் போட்டியின் 16வது சீசன் கடந்த மாத இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஹோம் மற்றும் அவே முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. 


சாய் சுதர்சன், விஜய்சங்கர்:


ஐபிஎல் போட்டியின் பிராதான நோக்கமே புதிய புதிய திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களை சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட வைப்பது தான். அவ்வகையில் தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடிவர்களின்  எண்ணிக்கை நீண்டு கொண்டே போகும். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறும் போதெல்லாம், இன்றைய போட்டியில் தங்களது மாநிலத்தினைச் சேர்ந்த வீரர்கள் விளையாடுகிறார்களா எனவும் கவனிக்கப்படுகிறது. 


இன்றைய போட்டியில் இரு அணி சாரிபிலும் தலா இரண்டு வீரர்கள் அதாவது மொத்தம் நான்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் களமிறங்கினர். அதில் குஜராத் அணி சார்பில், சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கரும், கொல்கத்தா அணி சார்பில் ஜெகதீசனும், வருண் சக்கரவர்த்தியும் களமிறங்கினர். 


மிரட்டல் பேட்டிங்:


குஜராத் அணி இன்றை போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதில், 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை எட்டியது. குஜராத் அணி இதுவரை 200 ரன்களை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் தான். 


இருவரும் களமிறங்கியது முதல் இருவரும் சிறப்பாகவும் பொறுப்புடனும் விளையாடினர். இருவரும் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விளாச, கொல்கத்தா அணியால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். இருவரும் சிறப்பான பார்னர்ஷிப்பால் குஜராத் அணியின் ரன்ரேட்டும் சிறப்பாக உயர்ந்து வந்தது. இதனால், இருவரது ரன்களும் சிராக உயர்ந்து வந்தது. இவர்களில் சாய் சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்தார். 


ருத்ரதாண்டவம்:


17 ஓவர்களுக்குப் பிறகு அடித்து ஆட முடிவு செய்த குஜராத் அணியின் இரண்டு தமிழ்நாடு வீரர்களும் ருத்ரதாண்டவமாடினர். சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 38 பந்தில் 53 ரன்கள் சேர்த்து இருந்தார். அதில் 2 பவுண்டரியும் 3 சிக்ஸரும் விளாசியிருந்தார்.  அதன் பின்னர் களத்தில் சூறாவளியாய்ச் சுழன்ற விஜய் சங்கர் 20வது ஓவரில் மட்டும் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் பறக்கவிட்டு அதகளப்படுத்தினார். இதனால் அவர் 21 பந்தில் அரைசதம் கடந்தார். இந்த அரைசதம் குஜராத் அணி சார்பில் அதிவேகமாக அடிக்கப்பட்ட அரைசதமாகும். இறுதிவரை களத்தில் இருந்த அவர் 24 பந்தில் 63 ரன்கள் சேர்த்து இருந்தார். அதில் 4 பவுண்டரியும் 5 சிக்ஸரும் அடங்கும்.