ஐபிஎல் போட்டித் தொடரின் 16வது சீசன் மிகவும் பிரமாண்டமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான  நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேப்டன் கூல் எனப்படும் மகேந்திரசிங் தோனி தலைமையில் நான்கு முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாட களமிறங்கியுள்ளன. இதில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி; 


டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, மொயீன் அலி, ஷிவம் துபே, எம்.எஸ் தோனி(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்


சென்னை அணியின் இம்பேக்ட் வீரர்கள்: 


துஷார் தேஷ்பாண்டே, சுப்ரான்ஷு சேனாபதி, ஷேக் ரஷீத், அஜிங்க்யா ரஹானே, நிஷாந்த் சிந்து


குஜராத் டைட்டன்ஸ் அணி: 


விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்



குஜராத் டைட்டன்ஸ் அணியின் இம்பேக்ட் வீரர்கள்: 


சாய் சுதர்சன், ஜெயந்த் யாதவ், மோஹித் ஷர்மா, அபினவ் மனோகர், கேஎஸ் பாரத்


இம்பேக்ட் ப்ளேயர் விதி முறை;


இந்த சீசன் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறையானது, டாஸ் போட்ட பின்னர் கேப்டன் விளையாடும் லெவனை அறிவிக்கும் போது இம்பேக்ட் ப்ளேயர்களையும் அறிவிப்பர். போட்டியின் தன்மைக்கு ஏற்ப ஆடும் லெவனில் இருந்து ஒருவரை வெளியேற்றி விட்டு இம்பேக்ட் ப்ளேயரை போட்டிக்குள் கொண்டு வந்து, அவரை பயன்படுத்தலாம். இதனால் போட்டியின் தன்மையே முற்றிலுமாக மாற வாய்ப்புள்ளது. மேலும், இம்பேக்ட் ப்ளேயரால் வெளியேற்றப்பட்ட வீரர் மேற்கொண்டு இந்த போட்டியில் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசன் முதல், வைடு மற்றும் நோ-பாலுக்கும் ரிவ்யூவ் கேட்கும் விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதால், இந்த விதியால் போட்டியின் போக்கு ஒரு பந்தில் மாறுபட  வாய்ப்புகள் உள்ளது.