ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன் நடைபெற்று முடிந்தது. இதில் இந்த ஆண்டு அறிமுகமான குஜராத் டைடன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் ஐ.பி.எல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கான ஒளிபரப்பு ரைட்ஸ் விலையை உயர்த்துவதற்கான திட்டத்தில் பிசிசிஐ இருப்பதாக ஜெய் ஷா கூறியுள்ளார்.


ஜெய் ஷா


இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், "நேஷனல் புட்பால் லீக், ஒரு போட்டி ஒளிபரப்புக்கு க்கு 17 மில்லியன் டாலர் பெறுகிறது. இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் ஒரு போட்டிக்கு 11 மில்லியன் டாலர் பெறுகிறது. பேஸ் பால் லீக்கும் கிட்டத்தட்ட இதே போலதான். இதுநாள் வரை ஐபிஎல்-இன் ஒரு போட்டிக்கு 9 மில்லியன் டாலர் பெற்று வருகிறது பிசிசிஐ. ஐபிஎல்-இன் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அது சென்று சேரும் ஆழத்தை கணக்கில் கொண்டு அதனை 12 மில்லியன் டாலராக உயர்த்த விரும்புகிறோம். அதன் மூலம் ஐபிஎல்-இன் பிரபலம் இன்னும் கூடும்." என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 



புதிய அணிகள்


கடந்த ஐபிஎல்-இல் இரு புதிய அணிகள் இடம்பெற்று இருந்தன. அதில் இரு அணிகளும் நன்றாக பெர்பார்ம் செய்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பை வென்றது. அதில் லக்னோ அணி அதனுடைய அடிப்படை விலையை விட 250 மடங்கு அதிக விலைக்கு விற்பனை ஆனது. அதனால் பிசிசிஐ-க்கு 1.7 பில்லியன் டாலர் லாபம் கிடைத்தது. 


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


ஐபிஎல் எதிர்காலம்


ஐபிஎல்-இல் தற்போதே 10 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், 2 மாதங்கள் முழுதாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதன் நீளத்தை இன்னும் அதிகமாக்குவதற்கான பிளானில் இருக்கிறது பிசிசிஐ. எல்லா அணிகளும் மற்ற அணியுடன் இரண்டு போட்டிகள் விளையாடும்படி செய்தால் ஒவ்வொரு அணிக்கும் 18 லீக் போட்டிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அப்படியென்றால் லீக் போட்டிகள் மட்டும் 90 ஐ நெருங்கும். அப்படியென்றால் ஐபிஎல் கிட்டத்தட்ட இரண்டரை மாதத்தை தாண்டும். 



ரைட்ஸ் விற்பனையில் மாற்றம்


இம்முறை ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு ரைட்ஸ்களை நான்காக பிரித்து விற்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 


பேக்கேஜ் 1: உள்நாட்டு தொலைக்காட்சி உரிமை


பேக்கேஜ் 2: டிஜிட்டல் உரிமை


பேக்கேஜ் 3: முக்கியமான போட்டிகளுக்கான உரிமை


பேக்கேஜ் 4: வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமை


என்று நான்காக பிரித்து விற்பதற்காக முடிவெடுத்துள்ளது. முக்கியமான போட்டிகள் என்றால் வீக்கெண்ட் போட்டிகளும், பிளே ஆப் போட்டிகளும் என்று கூறப்பட்டுள்ளது. 2024 இல் இந்தியாவில் 90 கோடி இன்டர்நெட் பயனாளர்கள் இருப்பார்கள், எனவேதான் டிஜிட்டல் உரிமைகளுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. என்னதான் ஐபிஎல் நாட்கள் கணக்கில் மற்ற போட்டி தொடர்களை விட நீண்டதாக இருந்தாலும் அவற்றை போல லாபம் ஈட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஏனெனில் NFL 43 பில்லியன் டாலரும், NBA 23 பில்லியன் டாலரும் ஈட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.