ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலககோப்பையை போல பிரம்மாண்ட திருவிழாவாக ஐ.பி.எல். தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல். தொடர் கடந்த மாதம் நிறைவு பெற்ற நிலையில், ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் ஜூன் 12-ந் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


இதன்படி, இன்று ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்திற்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது. இந்த முறை ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலத்தில் கடும் போட்டிகள் நிலவுகிறது. இந்த ஏலத்தில் டிஸ்னி – ஹாட்ஸ்டார், சோனி, ஸ்போர்ட்ஸ் 18, ஜீ என்டெர்டெயிண்மெண்ட், ஆப்பிள், கூகுள்,  ஸ்கை ஸ்போர்ட்ஸ் யுகே மற்றும் தென்னாப்பிரிக்கா சூப்பர்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.




அமேசான் பிரைமும் இந்த ஏலத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில்,  கடும் போட்டி காரணமாக அவர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை. ஆன்லைன் மூலமாக நடைபெறும் இந்த ஏலத்தில் பங்கேற்க ஒவ்வொரு நிறுவனமும் இந்திய மதிப்பின்படி 25 லட்சம் ரூபாய் நுழைவுக்கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை திருப்பி அளிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.


ஏலம் மொத்தம் நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதன்படி, இந்திய துணை கண்டத்தில் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு தனியாக ஒரு ஏலமும், டிஜிட்டல் உரிமத்திற்கு ஒரு ஏலமும், 18 போட்டிகளின் தொகுப்பிற்கான பிரத்யேகமற்ற டிஜிட்டல் உரிமைகள் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கான உரிமைகளுக்கு ஏலம் நடைபெற உள்ளது.




இந்த ஏலத்தில் உரிமம் பெறும் நிறுவனத்திற்கு 5 ஆண்டுகள் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்படும். கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான ஏலத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூபாய் 16, 347.50 கோடிக்கு உரிமத்தை கைப்பற்றியது. இந்த முறை ஏல உரிமை ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனையாகும் என்று பிசிசிஐ எதிர்பார்த்து காத்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண