2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தச் சூழலில் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 58 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் பல சிறப்பான கேட்ச்கள் பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பாக அமைந்த டாப்-5 கேட்சுகள் என்னென்ன?


 


ரவி பிஷ்னாய் vs கொல்கத்தா:




கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரேன் அடித்த பந்தை ரவி பிஷ்னாய் லாவகமாக ஓடி டைவ் செய்து பிடித்தார். இது ஒரு சிறப்பான கேட்சாக அமைந்தது. 


 


சுசித் vs பஞ்சாப் கிங்ஸ்:




பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் தீபக் ஹூடா பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் 13 ரன்கள் அடித்திருந்த போது ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தை டைவ் செய்து சுசித் அசத்தலாக பிடித்தார். இதுவும் நடப்பு ஐபிஎல் தொடரில் பிடிக்கப்பட்ட சிறப்பான கேட்ச்களில் ஒன்று. 


 


ரவீந்திர ஜடேஜா vs பஞ்சாப் கிங்ஸ்:




சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கிறிஸ் கெயில் தீபக் சாஹர் வீசிய மெதுவான பந்தில் அடிக்க முற்பட்டார். அப்போது அவர் அடித்த பந்தை ரவீந்திர ஜடேஜா அசத்தலாக டைவ் அடித்து பிடித்தார். இந்த கேட்ச் சிறப்பான ஒன்றாக அமைந்தது. 


 


ரவி பிஷ்னாய் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:




பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மீண்டும் ரவி பிஷ்னாய் சிறப்பான கேட்சை பிடித்தார். பெங்களூரு அணியின் ஹர்ஷல் பட்டேல் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை வெழுத்து கொண்டிருந்தார். அப்போது முகமது ஷமி வீசிய பந்தை அவர் தூக்கி அடித்தார். அந்தப் பந்தை ரவி பிஷ்னாய் சிறப்பாக ஓடி டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். 


 


ராகுல் திவாட்டியா vs பஞ்சாப் கிங்ஸ்:




ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் இந்த சிறப்பாக கேட்ச் பிடிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கேப்டன் ராகுல் சிறப்பாக ஆடி வந்தார். 91 ரன்கள் அடித்திருந்த போது ராகுல் சக்காரியா வீசிய பந்தை சிக்சருக்கு விரட்ட முற்பட்டார். அந்த சமயத்தில் பவுண்டரி எல்லை கோட்டில் நின்று கொண்டிருந்த ராகுல் திவாட்டியா குதித்து பந்தை உள்ளே தட்டிவிட்டு மீண்டும் வந்து கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த கேட்ச் மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்தது. 


மேலும் படிக்க:சென்னை vs கொல்கத்தா அன்றும், இன்றும் : களமிறங்கப்போவது யார்? யார்?