கிரிக்கெட் வட்டாரத்தில், உலகக்கோப்பைக்கு நிகரான பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக ஐபிஎல் வளர்ச்சி கண்டுள்ளது. ரசிகர் எண்ணிக்கையிலும், தொடர் நடத்துவதற்கான பண எண்ணிக்கையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல்லில் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில், கோப்பையை கைப்பற்றும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை, இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு என்ன பரிசு ஆகியவற்றைப் பற்றிய முழு விவரம் இதோ!
2021 ஐபிஎல் தொடரின் கடைசி நாள் இன்று. பரபரப்பான ப்ளே ஆஃப் சுற்றுக்கு பிறகு இரண்டு வலுவான அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோத உள்ளன. மூன்று சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டு முறை சாம்பியனான கொக்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் இறுதிப்போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.
2021 IPL Finals: தோனி vs கொல்கத்தா படை: 2012, 2021 ஐபிஎல்.,ல் இப்படி ஒரு கனெக்ஷனா? கோப்பை யாருக்கு?
2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகமானதில் இருந்து இது 14வது சீசன். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் அணிக்கான பரிசுத்தொகை மாறுபட்டு வருகின்றது. முதல் சீசனில் 4.8 கோடி ரூபாயாக இருந்த பரிசுத்தொகை இந்த சீசனில் 10 கோடியாக உயர்ந்துள்ளது.
2021 ஐபிஎல் பரிசுத்தொகை விவரம்:
முதல் இடம் பிடிக்கும் அணிக்கு - கோப்பை + 10 கோடி ரூபாய்
இரண்டாம் இடம் - 6.25 கோடி ரூபாய்
மூன்றாம் மற்றும் நான்காம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு - தலா 4.375 கோடி ரூபாய்
2008-ம் ஆண்டுக்குப் பிறகு, இடையில் 2014-ம் சீசனில் வெற்றி பெற்ற அணிக்கு 15 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. 2018, 2019-ம் ஆண்டுகளில் 20 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், 2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக ஐபிஎல் தாமதாக நடைபெற்றது ஐபிஎல் தொடர். ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் நடந்து முடிந்த அந்த ஐபிஎல் சீசனை அடுத்து 2021 சீசன் இரண்டு பாதிகளாக நடத்தப்பட்டது.
இதனால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டதால், 2020,2021 சீசன்களில் வெற்றி பெறும் அணிக்கு 10 கோடி ரூபாய் பரிசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்ச் கேப் பெறும் வீரருக்கும், அதிக விக்கெட்டுகள் எடுத்து பர்பிள் கேப் பெறும் வீரருக்கும், ஐபிஎல் வளர்த்து வரும் நம்பிக்கை வீரர் டைட்டிலை பெறும் வீரருக்கும் தலா 5 லட்சம் அளிக்கப்படுகிறது.
இறுதிப்போட்டியில் விளையாட இருக்கும் இரு அணிகளைப் பொருத்தவரை, இந்த சீசனின் முதல் பாதி சென்னை அணிக்கும், இரண்டாம் பாதி கொல்கத்தா அணிக்கும் சாதகமாக அமைந்திருந்தது. ஆனால், ப்ளே ஆஃப் சுற்றில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டன. 2012க்குப் பிறகு இறுதிப்போட்டியில் மோத போகும் சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையே டஃப் ஃபைட் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்